Tuesday, July 10, 2007

Very Good Morning.

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
 
Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.
_____________________________________________

சுறாமீனை `ஷார்க்' என்று ஆங்கிலத்தில் அழைக் கிறார்கள். ஆனால் ஜெர்மன் மொழியில் ஷார்க் என்றால் `மிகக் கொடிய' என்பது அர்த்தமாகும். சுறா மீனின் கல்லீரல் பகுதியில் உள்ள எண்ணைப் பொருள் மருத்துவ குணம் கொண்டது.

இதில் வைட்டமின் `ஏ, டி' அதிகம் உள்ளதால், காச நோய் மற்றும் உடல் இளைப்பு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. சுறாவின் தோலைக் கொண்டு மரத்தினால் செய்யப்பட்ட பொருட்களை பளபளப்பாக்குகிறார்கள். பூனைச் சுறா, வால் சுறா, கழுதைச் சுறா, தேவதை சுறா ஆகியவை சுறாமீனின் வகைகள்.
_____________________________________________

10-7-1806

முதல் இந்திய விடுதலைப் போர்
தமிழ்நாட்டில் வேலூர் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் 100 ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.
_____________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
"எங்க வீட்டு நாய் நேற்று செத்துப் போச்சு. எங்க அம்மாவால் இதை ஜீரணிக்கவே முடியல."

"உங்க அம்மா ஏங்க நாயைப் போய்ச் சாப்பிடுறாங்க?"


--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: