Friday, July 13, 2007

Very Good Morning.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
 
Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்னை தெரசா.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1. அன்னை தெரசா எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - அல்பேனியா

2. கொல்கத்தாவில் அவர் நிறுவிய சேவை அமைப்பின் பெயர்? - மிஷனரீஸ் ஆப் இண்டியா

3. அவரது உண்மையான பெயர்? - ஆக்னஸ் கோன்க்ஷா போஜாஹிï

4. புனிதர் பட்டத்தை 2003-ம் ஆண்டு அன்னை தெரசாவிற்கு அளித்தவர் யார்? - போப் இரண்டாம் ஜான் பால்

5. தமிழ்நாட்டிற்கு அன்னை தெரசாவை அழைத்து வந்து அவரது பெயரில் பல்கலைக்கழத்தைத் தொடங்கிய முதல்-அமைச்சர்? - எம்.ஜி.ஆர்

6. மெடல் ஆப் பிரீடம் என்னும் விருதை அன்னை தெரசாவிற்கு வழங்கிய அமெரிக்க அதிபர்? - ரொனால்டு ரீகன்

7. தனது எத்தனையாவது வயதில் அன்னை தெரசா சமூக சேவைக்கு வந்தார்? - 18-வது வயதில்

8. இந்தியாவில் உயிருடன் இருக்கும்போதே தபால் தலையில் இடம் பிடித்த முதல் இந்தியர்? - அன்னை தெரசா

9. அன்னை தெரசாவை அன்புடன் எந்தப் பெயரில் அழைத்தார்கள்? - கருணை தேவதை

10. எந்த ஆண்டு அன்னை தெரசாவிற்கு நோபல் பரிசு கிடைத்தது? - 1979-ம் ஆண்டு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
இன்றைய நகைச்சுவை
--------------------------------------
டாக்டர்.. என் கணவருக்கு சில நேரம் என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குது..

எப்படி சொல்றீங்க?

சில நேரம் என்னைப் பார்த்தா பயப்பட மாட்டேங்கிறாரு டாக்டர்..

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: