Wednesday, July 18, 2007

Very Good Morning.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
 
Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.
 
*******************************************************
உங்கள் கூடவே நிரந்தரமாக இருக்கும் இரண்டு டாக்டர்கள்

நீங்கள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உங்களுக்கு உதவ இரண்டு டாக்டர்கள் நிரந்தரமாக உங்கள் கூடவே இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இல்லை?

பிரிட்டனின் ஆன்மீகத் தாத்தா என்று புகழப்படும் ஜார்ஜ் ட்ரெவெல்யன் 1913ம் ஆண்டு இந்த இரண்டு டாக்டர்களைப் பற்றி இப்படி அறிமுகம் செய்து வைத்தார்:-

"என்னிடம் இரண்டு டாக்டர்கள் இருக்கின்றனர்; என் இடது கால்; என் வலது கால்!"

உடல் ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிப்பதோடு அனைத்து நோய்களையும் தீர்க்க வல்ல நடைப் பயிற்சியை இந்த இடது கால் மற்றும் வலது கால் டாக்டர்கள் தான் செய்ய முடியும்.

ஆகவே நீங்கள் உங்கள் இரு டாக்டர்களை தினமும் இயக்க வேண்டும்; மீதியை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்!

தினமும் நடப்பது என்பது ஆயுளைக் கூட்டி உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாக்கும் ஒரு அற்புதப் பயிற்சி!

2005ல் நவம்பர் 14ம் தேதி ஆர்ச்சிவ்ஸ் ஆப் இன்டர்னல் மெடிசின் நடத்திய ஒருஆய்வில் உடற்பயிற்சியும் இதய ஆரோக்கியமும் நேரடி சம்பந்தம் உடையவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடைப்பயிற்சி சிறந்த உடல் பயிற்சி!

தினமும் 30 நிமிடங்கள் நடப்பதானது உங்கள் ஆயுளை 1.3 வருடங்களைக் கூட்டுவதோடு, 1.1 வருடங்கள் இதய நோய் இல்லாமல் ஆக்குகிறது.

*******************************************************
இன்றைய நகைச்சுவை
________________________

வீடு மூழ்கிப் போனதுக்கு நிவாரணத் தொகை தரமாட்டேன்னு சொல்லிட்டாங்களா .. .. நல்லா விசாரிச்சீங்களா..?

நல்லா விசாரிச்சிட்டேன் கடன்ல வீடு மூழ்கிப்போனா தரமாட்டாங்களாம் ..!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: