பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife. ___________________________________________________________________________ நம் தாய்மொழி தமிழ், வளமை குன்றாத ஐந்து பழம்பெரும் மொழிகளில் ஒன்று. இந்த மொழி உலகிலுள்ள 60 நாடுகளில் பேசப்படுகிறது. தமிழ்நாடு இந்தியாவில் 11வது பெரிய மாநிலம்; இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 4 சதவிகிதம் கொண்டது. தமிழ்நாடு பழம்பெரும் சரித்திரப் பெருமை வாய்ந்தது. இதன் வரலாறு 6000 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவில் திராவிடக் கலாச்சாரம் பரவியது பெரிதும் தமிழ்நாட்டில் தான். சென்னை நீளமான சாலைகளுக்கும் பெயர்பெற்றது. இந்தியாவின் மொத்தத் தயாரிப்பில் 40% மோட்டார் உதிரி பாகங்களும் வாகனங்களும் சென்னையில் தயாரிக்கப்படுகின்றன. எனவே சென்னையை இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கிறார்கள். இந்தியாவிலுள்ள நான்கு பெரிய நகரங்களில் சென்னையும் ஒன்று. பரத நாட்டியக்கலை பிறந்தது தமிழ்நாட்டில்தான். சென்னையிலுள்ள பெசன்ட் தோட்டத்தில்தான் (Beasant Gardens) மேடம் பிலாவட்ஸ்கியும், கர்னல் ஆல்காட்டும் துவங்கிய Theosophical Society யின் தலைமையிடம் இருக்கிறது. இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய ஆலமரம் இங்குதான் இருக்கிறது. கிண்டி தொழிற்கல்லூரி என்று அழைக்கப்படும் அண்ணா பல்கலைக்கழகம் 1794ல் கட்டக் கலைக்கான பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. இன்று அது உலகிலேயே இரண்டாவது பழம்பெரும் தொழிற்கல்லூரியாக விளங்குகிறது. ரியோ டி ஜெனரோவிலுள்ள கோபகாபனா கடற்கரைக்குப் பிறகு இரண்டாவது பெரிய கடற்கரை நமது மெரீனா கடற்கரை. சென்னை மருத்துவக்கல்லூரிதான் இந்தியாவின் பழமை வாய்ந்த மருத்துவக் கல்லூரி. சுகாதார வசதிகளில் முதலாவதாகவும், கல்வி வசதிகளில் இரண்டாவதாகவும் Outlook பத்திரிக்கை 2003ல் சென்னையைத் தேர்வு செய்திருக்கிறது. வண்டலூர் மிருகக்காட்சி சாலைதான் இந்தியாவின் முதல் மிருகக் காட்சி சாலை(1855). இது தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரியது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில்தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பறவைகள் வருகின்றன. இன்றைய நகைச்சுவை உண்மைதாங்க.. என் பேரு மாலா, உங்க ஆபிஸ் ஸ்டெனோ பேருதானே கலா. -- Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Thursday, July 26, 2007
Very Good Morning.
Posted by Rajesh Prabhu. R at 8:31 AM
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment