Thursday, August 2, 2007

Very Good Morning.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை.
 
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.
________________________________________________________

கோஹினூர் வைரம்

கோஹினூர் என்றதுமே அனைவருக்குமே நினைவிற்கு வருவது கோஹினூர் வைரம்தான்.

கோஹினூர் என்ற இடத்திலே கண்டுபிடித்து எடுக்கப்பட்டதினால்தான் இதற்கு கோஹினூர் வைரம் என்று பெயர் வந்ததாக அனைவருமே எண்ணிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அது தவறு இந்த வைரத்துக்கு இடத்தின் பெயரால் இந்தப் பெயர் ஏற்படவில்லை.

இந்த வைரத்தின் ஒளிவீச்சால் பிரமித்தவர்கள், 'ஒளிமலை' என்ற பொருள்படும் பெர்சியன் மொழியில் உள்ள கோஹினூர் என்ற சொல்லை இவ் வைரத்துக்கு இட்டார்கள்.

பதினொன்றாம் நூற்றாண்டில் இருந்து சரித்திரப் புகழ் பெற்று, வரலாற்றில் சுடர் விடும் இந்த வைரம் மொகலாய மன்னர்களிடமும், பெர்சிரர்கள், ஆப்கானியர்கள் என்று அடுத்தடுத்து கைமாறிச் சென்று, 1849-ல் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரிடம் சென்றடைந்தது.

தற்போது பிரிட்டிஷ் அரச மணிமகுடத்தில் திகழ்கின்ற இவ்வைரம், முதலில் 186 காரட் எடை உள்ளதாக இருந்தது.பின்னர் 1882-ல் அதை 100 காரட் அளவில் வெட்டிக் குறைத்துவிட்டார்கள்.
________________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
என்னங்க.. கலப்புத் திருமணத்துல கலந்துக்கறதா சொல்லிட்டு போனீங்க.. சட்டையை எல்லாம் கிழிச்சுகிட்டு வந்திருக்கீங்க..?

கை கலப்புத் திருமணமா போயிருச்சுடி..!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: