Monday, August 27, 2007

Very Good Morning.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
 
Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others.
________________________________________________

லண்டன்: மொபைல் போன், "சார்ஜ்' தீர்ந்து விட்டால், இனி கவலைப்பட வேண்டாம், இதயத்துடிப்பு மூலமே, "சார்ஜ்' செய்து கொள்ளலாம். ஆச்சரியமாக இருக்கிறதா, உண்மை தான் பிரிட்டன் விஞ்ஞானிகள், இது தொடர்பாக ஒரு கருவியை கண்டுபிடித்து சோதனை செய்து வருகின்றனர்.

இதய பாதிப்பு நோயாளிகளுக்கு, "பேஸ்மேக்கர்" கருவி, எப்படி இதயத்துடிப்பை சீராக்குகிறதோ, அதேபாணியில், மொபைல் போனுக்கும், "சார்ஜ்' செய்யும் வகையில் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

"பேஸ் மேக்கர்' கருவியில், பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் தான், "பேஸ்மேக்கர்' இயங்கி, இதயத்துடிப்பை பாதிப்பில்லாமல் வைத்திருக்கும். இந்த, "பேஸ் மேக்கர்' கருவியில், மிகச்சிறிய அளவில், "ஜெனரேட்டர்' கருவி உள்ளது. இதயத்துடிப்பின் அதிர்வை வைத்தும், மின்சக்தியை ஏற்படுத்தி, அதை பேட்டரிக்கு தருகிறது. இப்படி, "பேஸ் மேக்கரில்' சக்தி வாய்ந்த, "ஜெனரேட்டர்' இயங்கி, இதயத்துடிப்பு அதிர்வை வைத்து மின்சக்தியை ஏற்படுத்தும் போது, அதே பாணியில், ஏன் மொபைல் போனில், "சார்ஜ்' செய்ய முடியாது? என்று, எண்ணினர் விஞ்ஞானிகள்.

பிரிட்டனில் உள்ள சவுதாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்டீவ் பீபே தலைமையில் குழுவினர், இது தொடர்பாக ஆராய்ந்து வந்தனர். மொபைல் போன் மட்டுமல்ல, எம்.பி.3 மியூசிக் சிஸ்டம், ஐபாட் போன்றவற்றுக்கு கூட, இப்படிசிறிய அளவில், "ஜெனரேட்டர்' கருவியை பொருத்தி, அதன் மூலம் மொபைலுக்கு மின்சக்தியை தர முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

மொபைல் பயன்படுத்துவோர், "சார்ஜ்' செய்ய, தனியாக சார்ஜரை தேடாமல், சட்டை பாக்கெட்டில் வைத்திருந்தாலே போதும். பாக்கெட்டுக்கு அருகே உள்ள இதயத்தின் துடிப்பால், மொபைல் போனில் உள்ள, "ஜெனரேட்டர்' இயங்கி, மின்சக்தியை தந்து, "சார்ஜ்' செய்துவிடும். சோதனை முழு வெற்றி அடைந்தவுடன், இந்த நவீன முறை அமலுக்கு வரும்.
________________________________________________

இன்றைய நகைச்சுவை
-------------------------------------
ஒருவர் : போன வாரம் உங்க கடையில் வாங்கின பருப்புல பூச்சி விழுந்து ஓட்டையா இருக்கு.

மற்றவர் : ஏங்க! நீங்க கொடுத்த லிஸ்டில் இருந்ததைத் தான்கொடுத்தேன். பாருங்க... 'துவாரம்' பருப்பு 1 கிலோ-ன்னு எழுதியிருக்கு.

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: