Monday, August 6, 2007

Very Good Morning.

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
 
To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.
______________________________________________________

* தேனீக்கள் சுரக்கும் ஒருவகை மெழுகுப் பொருளைக் கொண்டே தேன்கூடு அமைக்கப்படுகிறது.

* ராணித் தேனீ, வேலைக்காரத் தேனீ, ஆண் தேனீ என்று தேனீக்களில் மூன்று வகை உண்டு.

* ராணித் தேனீயும், வேலைக்காரத் தேனீயும் பெண் இனமாகும்.

* தேன்கூட்டில் ஏராளமான நுண்ணறைகள் இருக்கும். மூன்று வகைத் தேனீக்களும் தனித்தனி அறைகளில்தான் வாழும்.

* தேன் கிடைக்கும் இடத்தை வேலைக்காரத் தேனீக்கள் அறிந்து வந்து, அதை மற்ற தேனீக்களுக்கு நடனமாடித் தெரிவிக்கின்றன. இது தேனீ நடனம் எனப்படும்.

* சீனாவில் தேனீக்களை நோய்பட்ட இடத்தில் கடிக்க விட்டு அக்கு பஞ்சர் வைத்தியம் செய்கின்றனர்! இது ஒரு சுவைமிகு தகவல்.

* தேனீக்கள் தங்கள் உணவுக்காகத்தான் தேனைச் சேமிக்கின்றன. பாழும் மனிதன், அவற்றின் உழைப்பையும், உணவையும் கூட விட்டு வைப்பதில்லை.
______________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
பந்த் நடந்தா எதுக்கு மாசி போலீஸ் எதிர்க்குது..?

"மாமூல்" வாழ்க்கை பாதிச்சுடும்ல..?

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: