Friday, August 3, 2007

Very Good Morning.

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
 
Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.
____________________________________________________________

அதிசயம்.. ஆனால் உண்மை..

* 1979 ஆகஸ்ட் 14-ம் தேதி இங்கிலாந்து வேல்ஸ் பகுதியில் கிளைட் என்ற இடத்தில் காட்சியளித்த வானவில் மூன்று மணி நேரம் நீடித்தது. உலகிலேயே அதிக நேரம் நீடித்த வானவில் இதுதான்.

* 70 வயதான மனிதன் ஒருவன் தன் வாழ்நாளில் 70,000 மைல்கள் நடந்திருப்பான். இது பூமியை இரண்டு முறை சுற்றியதற்குச் சமம்.

* கரையானின் தாய்ப் பூச்சி வினாடிக்கு ஒரு முட்டையிடும். அதாவது, நாளொன்றுக்கு 86,000 முட்டைகள் இடும். வேறு எந்த உயிரினமும் இவ்வளவு வேகமாகத் தன் சந்ததியைப் பெருக்குவதில்லை.

* தேனியின் ரீங்காரம் அதன் குரல் ஒலி அல்ல. தன் இறகுகளை வினாடிக்கு 400 தடவைக்கு மேல் அடிப்பதால் ஏற்படும் ஒலியே அது.

* உலகில் அதிகம் புழக்கத்தில் உள்ள கரன்சி டாலர்.

* ரோமபுரியில் முன்பு மாதா மாதம் ஒருவர் தெருத் தெருவாக வந்து மாதப் பிறப்பைக் கூறி அறிவிப்பார். ரோம் மொழியில் இதற்கு கலோர் என்பார்கள். கலோர் என்ற சொல் நாளடைவில் காலண்டர் என மாறியது.

* நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் அளித்திருக்கின்றன.
____________________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
சர்தார்: இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க.
நண்பர்: நீங்க கேட்டீங்களா?
சர்தார்: நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க.

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: