Wednesday, October 3, 2007

Very Good Morning.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.
______________________________________________________

மீன்களின் வயதை அறிய முடியுமா?

நமது நாட்டில் மனிதரிடம் கூட வயது என்ன என்ற கேள்விக்குப் பதில் வாங்குவது கடினம். அப்படி இருக்கையில் பேசா மடந்தைகளான மீனிடம் எங்ஙனம் இந்தக் கேள்விக்குப் பதில் அறிவது. அதற்கும் அறிவியல் அறிஞர்கள் வழி கண்டு பிடித்துள்ளனர். எப்படி மரங்களின் வயதை அறிய, அடிமரத்தில் காணப்படும் மர வளையங்கள் உபயோகப்படுகின்றனவோ அது போல, மீன்களின் செதில்களில் காணப்படும் வளைய அமைப்புக்களைக் கொண்டோ அல்லது மீனின் உட்காது எலும்புகளின் வளைய எண்ணிக்கையைக் கொண்டோ ஒரு மீனின் வயதைச் சற்றேறக்குறைய கணிக்க முடியும்.

மீன்கள் எவ்வளவு வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன?

சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் வரை உயிர் வாழக்கூடிய மீன்களிலிருந்து 50 ஆண்டு வரை உயிர் வாழக்கூடிய ரஷ்ய நாட்டில் காணப்படும் ஸ்டர்ஜன் (படத்தில் காண்க) வகை மீன்கள் வரை, உயிர் வாழும் வயது ஒவ்வொரு வகை மீன்களுக்கும் வேறுபடுகிறது.

மீன்கள் தூங்குகின்றனவா?

தூக்கம் என்பது ஒரு அமைதியான நிலை. ஒவ்வொரு விலங்குக்கும் இந்தத் தூக்க நிலை வேறுபடுகிறது. மனிதன் கண்களை மூடிக் கட்டிலில் படுத்தால் அது தூக்க நிலை. ஆனால் சில விலங்குகள் அதிலும் குறிப்பாக யானைகள் நின்றுகொண்டே தூங்க முடியும். ஆகாயத்தில் ராக்கெட்டில் பயணம் செய்யும் விண்வெளி வீரர்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டே தூங்க முடியும். ஆக மொத்தம் தூக்கம் என்பது ஒரு அமைதியான, உடல் அவயங்களுக்கு ஓய்வு தரும் ஒரு செயலாகும். அது எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கலாம். கண்களை மூடினால் தான் தூக்கம் என்று இல்லை. மீன்கள் பெரும்பாலானவை இமைகள் இல்லாத கண்களைப் பெற்றுள்ளன. இவைகள் எப்படிக் கண்களை மூடும்? ஆகவே சூரை மீன்கள் நீந்திக் கொண்டே தூங்குகின்றன. கிளி மீன்கள் தங்களைச் சுற்றி ஒரு விதமான சளி போன்ற உறையை அமைத்துத் தூங்குகின்றன. (பார்க்க படம்) ஆனால் விழிகள் கொட்டக் கொட்ட விழித்திருக்கும். ஆகவே தூக்கம் கண்களைத் தழுவக்கூடிய ஒரு சமாச்சாரம் அன்று. அது மூளைக்கு ஓய்வு தரும் ஒரு செயலாகும்.

மீன்கள் எவ்வளவு வேகமாக அவை நீந்துகின்றன?

பெரும்பாலான மீன்கள் வால் துடுப்பின் முன்னோக்கி உந்தும் விசையைப் பயன்படுத்தியே நீந்துகின்றன. சூரை, வஞ்சிரம், வவ்வால் ஆகிய மீனினங்கள் மணிக்கு 50மைல் வேகத்தில் நீந்த முடியும், மணிக்கணக்காக அல்ல, இது சில நிமிடங்களுக்குத் தான். அப்படியென்றால் அவை சாதாரணமாக நீந்தும் வேகம்தான் என்ன? அது மணிக்கு 5லிருந்து 10 மைல்.
______________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
''அறுபதாம் கல்யாணம்கிறதுக்காக பத்தரிகையை இப்படியா அச்சடிக்கிறது?''

''ஏன்.. என்ன ஆச்சு?''

''திருநரைச் செல்வன் திருநரைச் செல்வி'னு போட்டிருக்காங்க..!''

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: