Tuesday, October 9, 2007

Very Good Morning.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?
___________________________________________________

* வாழைத்தண்டை சிறு துண்டுகளாக்கி இஞ்சி, எலுமிச்சம்பழச் சாறு, பூண்டு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

* வாகனப் பயணத்தின்போது வாந்தி வராமல் இருக்க, எலுமிச்சைப் பழம் அல்லது மல்லிகைப் பூவை அடிக்கடி முகரலாம்.

* முகப்பரு, தழும்பு ஆகியவற்றுக்கு பசலைக் கீரைச்சாறு மருந்தாக பயன்படுகிறது.

* வலிப்பு போன்ற குறைபாடுகளை நீக்குவதற்கு வெள்ளை வெங்காயத்தில் இருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.

* கட்டான உடலைப்பெற வாரம் இருமுறை கருணைக் கிழங்கை சமைத்து சாப்பிடவும்.

* எல்லா விதமான புற்றுநோய்களுக்கும் மலை மரிக்கொழுந்து செடியில் இருந்து மருந்து தயாரிக்கிறார்கள்.

* இளைஞர்களின் உடலுக்கு தெம்பு தருவது கேழ்வரகு ஆகும்.

* "சோர்வு அடைந்தால் மட்டுமே உறங்கச் செல்லுங்கள். படுக்கை என்பது யோசனை செய்வதற்கான இடமல்ல. அப்படி ஏதேனும் யோசனை வந்தால், உடனே படுக்கையை விட்டு எழுந்து விடுங்கள். தூக்கம் வருவது போல் தோன்றும் வரை திரும்ப படுக்காதீர்கள். இப்படியே சில நாட்கள் பழகினால் உறக்கம் தானாக வந்துவிடும்,'' -மனோதத்துவ நிபுணர் ரிச்சர்டு ஆர். பூட்சின்.
___________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
'எதிரி மன்னனுடன் போர்அடுத்த மாதம்தானே தொடங்குகிறது... அதற்குள் ஏன் மன்னா அவன் நாட்டுக்குச் சென்று அங்கிருந்து ஓடி வருகிறீர்கள்.?''

''இது சோதனை ஓட்டம் அமைச்சரே...''

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: