Thursday, October 25, 2007

Very Good Morning.

தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

Because evil produces evil, therefore should evil be feared more than fire.
_____________________________________________________________

1. மனிதன் இறக்கும் போது உடலில் இருந்து கடைசியாக விலகும் புலன் கேட்டல் ஆகும். பார்வையே முதலில் பிரியா விடை பெறும் புலனாகும்.

2. ஸ்ட்ராபரி பழங்களில் மட்டுமே விதைகள் பழத்திற்கு வெளியே முளைக்கின்றன.

3. ஆனைக்கொய்யா (Avocado) விலேயே பழங்களில் அதிக கலோரிகள் உள்ளன. ஒவ்வொரு 100 கிராமிலும் 167 கலோரிகள் உள்ளன.

4. ஆகாயப்பரபில் இருந்து விழும் தூசு துணிக்கைகளால் பூமியின் எடை ஆண்டொன்றுக்கு 100 டன்களால் அதிகரிக்கின்றது.

5. புவியீர்ப்பு விசைகாரணமாக பூமியில் உள்ள மலைகள் 15,000 மீட்டருக்கு மேல் உயரமாக இருப்பது சாத்தியப்படாது.

6. விண்வெளியில் மேலதிகமாக எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 530 கிலோ கிராம் மேலதிக எரிபொருள் தேவை.

7. ஒவ்வொரு ஆண்டும் சந்திரன் பூமியை விட்டு இரண்டு அங்குலம் அப்பால் விலகிக் செல்கிறது.

8. மனித உடலில் உள்ள குருதிக்குழாய்களை அடுத்தடுத்து ஒவ்வொன்றாக அடுக்க முடிந்தால் அதனை 12,000 மைல்கள் நீளத்திற்கு நீட்ட முடியும்.

9. பௌர்ணமி முழு நிலவில் பிரகாசம் அரை நிலவிலும் 9 மடங்கு அதிகம்.

10. உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஒரு முறையேனும் தொலைபேசியில் பேசியதில்லை.
_____________________________________________________________

இன்றைய நகைச்சுவை
-----------------------------------------
"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: