Thursday, September 13, 2007

Very Good Morning.

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?
_______________________________________________________

உலகத்தையே தனது உள்ளங்கையில் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டவர் அலெக் ஸாண்டர். ஒவ்வொரு நாடாக கைப்பற்றி வந்த அலெக்ஸாண்டர், தனது படையுடன், பாக்தாத் நகரை கடந்த போது, மெசபடோமியாவையும், பாபிலோனிய நகரத்தின் அழகையும் பார்த்து அசந்து போனார்.

அங்குள்ள தொங்கும் தோட்டத்தில் இருந்த பாக்கு, ஈச்ச மரங்கள் பற்றி இவர்கள் கதை கதையாய் சொன்னதாக வரலாற்று குறிப்புகள் தெரி விக்கின்றன. நேபுகாத்னேச்சரின் அரண் மனை, தொங்கும் தோட்டம், பாபிலோனிய நகரத்து எல்லைக் காவல் சுவர் போன்றவை பற்றி அவர்கள் சொல்லியதை, இன்றைய வரலாற்று ஆசிரியர்களும் விரும்பித்தேடி ஆராய்ந்து வருகின்றனர்.

மழையே பெய்யாத இடத்தில் எப்போதும் பசுமை தாலாட்டும் தோட்டத்தை உருவாக்குவது என்றால் அவ்வளவு சாதாரண காரியமா? பாலைவனமான பாபிலோனியாவில், குட்டி சோலைவனத்தை அமைக்க படாதபாடு பட்டனர். இதுவும் தாஜ்மகால் போலவே ராணி ஆசைபட்டதால், ராஜா அமைத்த தோட்டமே தொங்கும் தோட்டம்!

பாபிலோனிய பேரரசின் புகழ்மிக்க அரசர்களில் ஒருவரான இரண்டாம் நேபுகாத்னேச்சர், தனது காதல் மனைவி அமைடிஸின் ஆசையை பூர்த்தி செய்ய இந்த தொங்கும் தோட்டத்தை அமைத்தார். அமைடிஸ், பாபிலோனியாவின் பக்கத்து நாடான மெடஸ் நாட்டு இளவரசி. தனது எல்லையை விரிவாக்கிய இரண்டாம் நேபுகாத்னேச்சர், அமைடிஸின் தந்தையுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, அமைடிஸ் ராணியானாள்.

தனது நாட்டில் மலைவளம், இயற்கைவளம் என பசுமையான சூழலில் வாழ்ந்த அமைடிஸுக்கு பாபிலோனியாவின் வறட்சி பிடிக்கவில்லை. இதனால் தனது தாய் வீட்டைப் பற்றிய நினைவோடு இருந்தாள். இதை புரிந்து கொண்ட மன்னன், அவளுக்காகவே இந்த தோட்டத்தை அமைத்தான். இங்கு அடுக்கடுக்கான வரிசைகளில் மெத்தெனும் பசும்புல், மலர், செடி, கொடிகளுடன் மரங்களும் அமைந்திருக்கின்றன.

இதனால் எந்த நேரமும் நல்ல மணமும், குளிர்ந்த தென்றலும் தவழும் இடமாக இருக்கிறது. தோட்டத்தின் நுழைவாயிலில் தொடங்கி படிப்படியாக மேலேறி உச்சிக்கு போக தனியாய் படிகளும் இருந்தன. தோட்டத்தின் உச்சியிலிருந்து பாபிலோனிய நகரின் அழகை முழுமையாக பார்க்க முடியும்!
_______________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
ஒருவர்: ஏங்க இப்படிக் கடற்கரைல உக்காந்துகிட்டுக் கன்னாபின்னான்னு எல்லாரையும் குறைசொல்லிக்கிட்டிருக்கீங்க?

மற்றவர்: "காற்றுள்ளபோதே தூற்று"ன்னு சொல்லியிருக்காங்களே, அதுதான்!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: