Wednesday, September 26, 2007

Very Good Morning.

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.
________________________________________________________

தங்கம் !!!

வளத்தையும் சுபிட்சத்தையும் குறிக்கும் பொருள் தங்கம். தங்கத்தை முதலீடாகத்தான் வாங்க நினைக்கிறார்கள். உலகத்தின் எந்த மூலையில் வேண்டுமானாலும் தங்கத்தை விற்றுக் காசாக்க முடியும் என்பதே அதன் சிறப்பு. உலோகங்களில் தங்கம் பாதுகாப்பானது. துருப்பிடிக்காது. தங்கத்தை அமிலங்கள் அழிப்பதில்லை. தஙகத்தின் விலை கூடினாலும் சரி, குறைந்தாலும் சரி, நம் நாட்டில் தங்கம் வாங்குவதை யாரும் நிறுத்துவதில்லை. அது நமக்கு வாழ்வியல் பழக்கம். குடும்ப நடைமுறை என்றும் கூறலாம். தாங்கள் வாங்குவது ஒரு சேமிப்பு என்பதுதான் பெரும்பாலோரின் கருத்து. ஒரு நாட்டின் தங்க இருப்பைக் கொண்டுதான் பணம் அச்சடிக்கப்படுகிறது. தங்கம் இல்லாவிட்டால் கரன்சி நோட்டுக்கள் இல்லை. உலகிலேயே அதிகத் தங்கம் வைத்துள்ள இடம் அமெரிக்காவின் நாக்ஸ்கோட்டைதான். ஒவ்வொரு ஆண்டிலும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை தினத்தின் மூன்றாம் நாளான திருதியை அன்றுதான் அனுஷ்டிக்கப்படுகிறது அட்சய திருதியை. அன்று எல்லா நகைக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. தமிழ் நாட்டில் அன்று தங்கம், வெள்ளி வாங்குவததை முக்கியமாக சுபிட்சமாகக் கருதுகிறார்கள். கர்நாடகத்தில் அசுரர்களை அழித்த பராசக்தியை வழிபடுவது அட்சய திருதியையின் முக்கிய அம்சமாகும். உத்திரப் பிரதேசத்தில் பகவான் கிருஷ்ணரின் (பாங்கேபிஹாரி) பாத தரிசனத்திற்காகக் கோவிலுக்குச் செல்வார்கள். நான்கு யுகங்களில் முதல் யுகம் அன்றுதான் துவங்கியதாக ஐதீகம். அட்சய திருதியை அன்று மட்டும்தான் கிருஷ்ணரின் பாத தரிசனம் கிடைக்கும். ராஜஸ்தானில் எல்லாமே வண்ண மயமான விழாக்கள்தான். அட்சய திருதியை 18 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும். இதை கன்கவுர் என்று குறிப்பிடுவார்கள்.

பார்வதி தேவி பிறந்த வீட்டிற்கு சீராட வருவதால் இந்த விழாக்கோலம் என்பார்கள். பிரம்மா பூமியில் மனிதர்களை சிருஷ்டித்த தினம் அட்சய திருதியை என்று புராணம் கூறுகிறது.

தங்கத்திற்காக முகலாயப் படையெடுப்புக்கள் நடந்ததை நமது வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. எப்படியும் தங்கம் நமது வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட அத்யாவசியமான பொருள். உடல் அழகுக்கும், இளமை நீடிப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் தஙகபஸ்பம் சாப்பிடுவது நல்லது என்று பழங்கால நூல்கள் கூறுகின்றன. உடல் ஆரோக்கியத்துடன் ஆயுளும் அதிகரிக்கும் என்பது பல நாட்டு மக்களின் நம்பிக்கை. போட்டோ ·பிலிமில் கூடத் தங்கம் பயன் படுத்தப் படுகிறது. முதன் முதலாகத் தங்கப்பல் கட்டியவர்கள் சீனர்கள் என்கிறது சரித்திரம்.

நவீன மருத்துவத்தில் மூட்டு நோய்க்கு வலியைக் குறைக்கத் தங்கத்தைப் பயன் படுத்தத் துவங்கியுள்ளனர். வாத நோய், இணைப்பு எலும்புக்கு பலமாகத் தொடர்ந்து தங்கத்தை உபயோகித்தால் நல்ல பலன் இருப்பதாக பர்மிங்ஹாமிலுள்ள மருத்துவமனையின் ஆராய்ச்சியின் கருத்து. ஒவ்வொரு தங்க நகைக்கும் சமூக, மத அடையாளங்கள் உண்டு. மதச் சடங்குகளின் போது தங்கத்திற்கு உயர்ந்த அங்கீகாரம் உண்டு. இந்தியக் கலாசாரத்தில் செல்வம், பாரம்பரியம், தெய்வீகம் இவை எல்லாவற்றிலும் முக்கிய அம்சமாக விளங்குவது தங்கம் தான்.
________________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
மொக்கை குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்தார்.. நீதிபதி அவரிடம் கேட்டார்..

உன்னை ஏன் கைது செய்தீருக்கிறார்கள் என்று அறிவாயா..?

தெரியும் அய்யா.. நான் கொஞ்சம் அவசரமாக ஷாப்பிங் செய்ததால் என்னைக் கைது செய்துவிட்டார்கள்..

என்ன உளறுகிறாய்..? அவசரமாக பொருட்களை எடுத்தால் கைது செய்வார்களா..??

ஆமாம் அய்யா.. கடை திறக்கும் முன்பே நான் நகைகளை எடுத்தது தவறாம்.. கைது செய்துவிட்டார்கள்..!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: