அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். Never have the envious become great; never have those who are free from envy been without greatness. ___________________________________________________________ நாட்டு மக்களுக்கு சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும், "பாரத ரத்னா' விருதை முதன் முதலாக பெற தேர்வு செய்யப்பட்டவர், உலக பல்கலைக்கழகங்களில் 17 டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர்... "அவர் ஒரு பெரிய ஆசிரியர். அவரிடமிருந்து ஏராளமாக கற்றுக் கொள்ளலாம்...' என நேருவால் புகழப்பட்டவர், இதனால்தான் தேசிய ஆசிரியர் கழகத்தின் கோரிக்கைக்கு இணங்க இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தனை சிறப்பிற்கும் உரியவர்தான் சர்வ பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். அவர் செப்., 5, 1888ல் வீராசாமிசீதம்மாள் தம்பதிகளுக்கு மகனாக திருத்தணியில் பிறந்தார். பெற்றோர் ஆந்திர மாநிலத்தின் நலகொண்டா பகுதி "சர்வ பள்ளி"யை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இதனாலேயே இவர், "சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன்" என்று அழைக்கப்படுகிறார். திருத்தணியில் பள்ளிப் படிப்பையும், வேலுரில் உயர்நிலைக் கல்வியை முடித்து, சென்னை கிறிஸ்துவ கல்லுரியில் தத்துவப் பாடத்தை முக்கிய பாடமாக கொண்டு எம்.ஏ., பட்டம் பெற்றார். சென்னை மாநிலக் கல்லுரியில் 1908ல் தர்க்க இயல் உதவி பேராசிரியராகத் தன் ஆசிரியர் பணியை துவங்கி, 9 ஆண்டுகள் பணி புரிந்தார். தன் மாமன் மகள் சிவகாமியை மணம் முடித்தார். அவர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற பல விதங்களில் உதவினார். மைசூர் பல்கலை கழகத்தில் 1918ல் தத்துவ பாட பிரிவில் பேராசிரியராக பதவி ஏற்றார். அப்போது, "பிலாசபி ஆப் ரவீந்திரநாத்" என்ற நுலை எழுதி, தாகூரின் பாராட்டை பெற்றார். அதோடு இந்தியாவிலுள்ள எல்லாப் பல்கலைக் கழகங்களும் ராதாகிருஷ்ணனைப் பணியமர்த்த விரும்பின. அந்தளவு அவரின் புகழ் எங்கும் பரவியது. கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போது, "ஆச்சார்ய" பட்டம் வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் பேரரசின் தத்துவதுறை மாநாடு 1926ல் நடந்தபோது இந்தியா சார்பில் கலந்து கொண்டார். டாக்டர் ராதாகிருஷ்ணன் மடை திறந்த வெள்ளம் போல ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் வாய்ந்தவர். இதையறிந்த பிரிட்டிஷ் அகாடமி இவரைச் சொற்பொழிவாற்ற அழைத்தது. ஆசியக் கண்டத்திலிருந்து இங்கு பேசச் சென்ற முதல் மனிதர் இவரே. இன்றைய நகைச்சுவை "இங்கே மேகத்தடை ஜாஸ்தியா இருக்காம்..." --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Thursday, September 6, 2007
Very Good Morning.
Posted by Rajesh Prabhu. R at 7:03 AM
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment