படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained. ___________________________________________________________ * பசிபிக் கடலில் உள்ள சில மீன்கள் பஞ்ச வர்ணங்களில் உள்ளன. "கிளி மீன்கள்'' என்று இவைகள் அழைக்கப்படுகின்றன. இவற்றின் பற்கள் கிளியின் அலகு போல, உதட்டுக்கு வெளியே நீண்டு கொண்டிருக்கும். இவைகள் சங்கு, கிளிஞ்சல் போன்றவைகளை விழுங்கி தொண்டையில் வைத்துக் கொண்டு பின்னர் நொறுக்கி சாப்பிடுகிறதாம். * ஆஸ்திரேலியாவில் உள்ள கோலா எனப்படும் கரடி இனம் தண்ணீரே குடிப்பதில்லை. வெறும் யூகலிப்டஸ் மரத்தின் பட்டையைத் தின்றே உயிர் வாழ்கிறது. * உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வாழ்பவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அப்பாவின் பெயரைத்தான் இனிஷியலாகப் போடுகிறார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டில் மட்டும் அம்மாவின் பெயரை இனிஷியலாகப் பயன்படுத்துகிறார்கள். * நாம் முகவரியுடன் சேர்த்து பின்கோடையும் குறிப்பிடுவோம். இதில் உள்ள 6 எண்களில் முதல் எண் மாநிலத்தையும், அடுத்த இரண்டு எண்கள் துணை வட்டத்தையும், கடைசி 3 எண்கள் குறிப்பிட்ட தபால் நிலையங்களையும் குறிக்கிறது. * ஐரோப்பாவில் ஏவப்படும் ராக்கெட்டுகள் "ஏரியன்'' என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. `ஏரியன்' என்பதற்கு ராக்கெட் என்பது பொருள். * ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள போர்த் என்னும் ரெயில்வே பாலம் குளிர்காலத்தில் இருப்பதைவிட கோடை காலத்தில் ஒரு மீட்டர் அதிகமாய் நீண்டு காணப்படுகிறதாம். * பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த நிலை கோபுரத்தைப் போல, வேறு சில கோபுரங்களும் இருக்கின்றன. 1560-ம் ஆண்டில் ருமேனியாவில் கட்டப்பட்ட கோபுரம் ஒன்றும், 1573-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டில் கட்டப்பட்ட பெரிய கோபுரம் ஒன்றும், பைசா நகரக் கோபுரம் போல சாய்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறது. இன்றைய நகைச்சுவை கோகிலா: அடப் பாவமே! எப்படித்தான் தாங்கிக்கறியோ நீ! அவரை ஏன்னு கேக்கமாட்டியா? கமலா: அவர் பண்ற சமையலை அவரே குறை சொல்லிகிட்டா நான் எதுக்குடீ கேக்கணும்! --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Monday, September 10, 2007
Very Good Morning.
Posted by Rajesh Prabhu. R at 6:39 AM
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment