Showing posts with label Thirukkural. Show all posts
Showing posts with label Thirukkural. Show all posts

Friday, September 21, 2007

Very Good Morning.

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.

To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory.
______________________________________________________

பழைய கணக்கீட்டு முறைகள்

தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது. நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர். அவர்களின் நீட்டல் அளவு முறை கீழே

8அணு - 1தேர்த்துகள்
8தேர்த்துகள் - 1பஞ்சிழை
8பஞ்சிழை - 1மயிர்
8மயிர் - 1நுண்மணல்
8நுண்மணல் - 1கடுகு
8கடுகு - 1நெல்
8நெல் - 1பெருவிரல்
12பெருவிரல் - 1சாண்
2சாண் - 1முழம்
4முழம் - 1கோல்(அ)பாகம்
500கோல் - 1கூப்பீட
______________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
சுட்டிப்பையன்: சார், என் தலையில எறும்பு ஏறுது பாருங்க..!

வாத்தியார்: அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்றே?

சுட்டிப்பையன்: நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலையில ஒன்னுமே ஏறாதுன்னு..!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Thursday, September 20, 2007

Very Good Morning.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.

Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.
____________________________________________________________

உயிரினங்கள் தற்கொலை செய்து கொள்வது சாத்தியமா?

எலி போன்ற சிறு பாலுட்டிகளும், பறவைகளும் அபூர்வமாக தமது ஜன நெரிசலை குறைக்க கூட்டு தற்கொலை செய்து கொள்வதுண்டு.
____________________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
அப்பா: ஏன் சின்னா அறிவியல் பரீட்சையில் ஃபெயில் ஆயிட்டே..?

சின்னா : அன்னிக்கு ஆப்செண்ட்..!

அப்பா: இல்லியே.. அன்னிக்கு நீ பள்ளி போனியே.. எனக்கு நல்லா நினைவிருக்கு..

சின்னா : நான் போனா போதுமா..? எனக்கு முன் பெஞ்ச்ல இருக்கறவன் வர வேண்டாமா..?

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Wednesday, September 19, 2007

Very Good Morning.

காமை செல்வத்திற்கு யாதெனின் வெ காமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness.
________________________________________________________________

கலர் கலராக சாப்பிடுங்க.. நோயைத் தடுங்க

பச்சை நிறம்:
பீன்ஸ், பாகற் காய் போன்ற பச்சை காய்கறிகளிலும், கீரை வகைகளிலும் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ் நம் கண்ணில் வரக் கூடிய பலவித மான பிரச்சனைகளையும், கான்சர்ரையும் தடுக்க வல்லது. அதிலும் குறிப்பாக பிராக்கோலியில் உள்ளசல்போரபேன் நம் உடம்பில் எதிர்ப்பு சக்தியை கூட்டி விடும். அதோடு எல்லாவித கான்சரையும் விரட்ட கூடிய சூப்பர் மேன் பிராக்கோலி தான்.

ஆரஞ்சு நிறம்:
கேரட், பூசணி, பப்பாளி போன்றவற்றில் காணப்படும் ஆல்ஃபா கரோட்டீன், பீட்டா கரோட்டீன் போன்ற சத்துக்கள், கான்சர் தலைவைத்தும் படுக்காது. பப்பாளி தினமும் ஒரு கப் சாப்பிட்டு வந்தால், வைட்டமின் சி தேவையான அளவு கிடைக்கும், புண்களையும் சீக்கிரம் ஆற்றும்.

பிரவுன் நிறம்:
உடம்பிள்ள கழிவுகள் வெளியேற வில்லை என்றால் விஷமாக உடம்பில் தங்கிவிடும். இந்த விஷத்தை விரட்டுவதுநார்சத்து மிகுந்த தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பிரட் வகைகள் தான். அதோடு வைட்டமின் பி யும் கிடைக்கும்.

சிவப்பு நிறம்:
இரவிலும் கண்கள் பளிச் என தெரிய வேண்டுமா?. அப்படினா தக்காளி, கெச்சப், ஸ்ட்ரா பெர்ரி போன்ற சிவப்பு நிற பழங்களை சாப்பிடனும். அதொடு இதிலுள்ள லைகோபென், மார்பக புற்று நோய்களுக்கு BYE சொல்லி விடும்.

வயலெட் நிறம்:
லங் கான்சர் என்னும் வில்லன் பயப்படும் ஹீரோ யார் தெரியுமா?. ஊதா நிற காய்கறிகள் தான்.கத்தரிக்காய், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற காய்கற்கள் தான்.

உடனடி சக்தி பெற:
அன்னாசி பழம் 3 துண்டுகள், ஒரு வாழைப் பழம், 6 ஃபிரஷ்ஷான ஸ்ட்ராபெர்ரி மற்றும் முலை விட்ட கோதுமை ஒரு பிடி, இவை 4-ம் சேர்த்து ஜூஸ் செய்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான சக்தி உடன் கிடைத்து விடும்.
________________________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
அப்பா : ஏண்டா சின்னா.. ஒரு மாசமா பள்ளிக்கு போய் வரியே.. பிடிச்சிருக்கா..?

சின்னா : போறது பிடிச்சிருக்கு.. வர்றது ரொம்பப் பிடிச்சிருக்கு.. நடுவில வெட்டித்தனமா ஒரு 5 மணி நேரம் அங்க உக்காந்து தொலைக்க வேண்டியிருக்கு.. அதுதாம்பா பிடிக்கல..!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Tuesday, September 18, 2007

Very Good Morning.

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory.
________________________________________________________

1) அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் - நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத் திரும்பி வருகிறது.

2) நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் பாராட்டுங்கள் - பாராட்டுக்களால் மகிழ்வுறுவது ஒரு இயற்கையான மனித சுபாவம்.

3) மன்னிப்பைக் கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள் - இரவு உறங்கு முன்பு தனக்கு எதேனும் தவறு இழைதவர்களை மனதார மன்னித்து விடுங்கள்.

4) எவரைப் பற்றியும் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

5) மனத்தை ஒரு குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் - எதிர்மறையான எண்ணங்கள், பொறாமை, பேராசை, கோபம் ஆகியவை துன்பம் விளைவிக்கும்.

6) எது நடக்கிறது என்பதைவிட நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம் - சில நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் நிம்மதியை நிச்சயிக்கிறது.

7) நல்லது நடக்குமென்றே நம்புவோம் ஆனால் மோசமானவை நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.

8) குழந்தைகளிடம் தன்னுடைய பெற்றோர்கள் எப்போதும் தங்களிடம் அக்கறை காட்டவும், வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற முறையில் பழக வேண்டும்.

9) மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.

10) நாம் எப்போதுமே வெற்றி பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

11) நண்பர்கள் வாழ்கையில் முக்கியமானவர்கள்.

12) மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு நாம் சாதனையை நோக்கி நடையிடவேண்டும்.

13) உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.

14) மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள் - குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.
________________________________________________________

இன்றைய நகைச்சுவை
-----------------------------------
டாக்டர் மோசமா... எப்படி ?

பேஷண்ட்டைப் பார்த்து, நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்கறாரே ?

இதிலென்ன தப்பு ?

ஆச்சரியமாகக் கேட்கறாரே..!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Friday, September 14, 2007

Very Good Morning.

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெ·கிப்
பொல்லாத சூழக் கெடும்.

If he, who through desire of the virtue of kindness abides in the domestic state i.e., the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish.
____________________________________________________________

பெண்மையைப் போற்றுவோம்..

ஓவ்வொரு துறையிலும் வெற்றிக்கொடி கட்டிய முதல் பெண்மணிகள் பட்டியல்

உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் - திருமதி ருக்மணி லெட்சுமிபதி

இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் - செல்வி பச்சேந்திரிபால்

இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் - திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - திருமதி கேப்டன் லெட்சுமி ஷேகல்

இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - 'சமுக சேவகி' அருந்ததிராய்

பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் - திருமதி எம். எஸ். சுப்புலெட்சுமி

இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் சம்பளம் பெற்ற பெண்மணி - திருமதி கே.பி. சுந்தராம்பாள்

ஆக்ஸிஜன் இல்லாமல் எவரேஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் வீராங்கனை - செல்வி பூதோர்ஜி

ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை - செல்வி ஆர்த்தி சாஹா

இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் தலைமை நீதிபதி - திருமதி லீலா சேத்

இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி - திருமதி பீம்லா தேவி
____________________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
உபயோகமில்லாத எந்தப் பொருளையும் தூக்கி உடனே வீசி விடாதீர்கள்.ஒருநாள் அது மிக உபயோகமாய் இருக்கும்.

உதாரணம் கங்குலி!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Thursday, September 13, 2007

Very Good Morning.

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?
_______________________________________________________

உலகத்தையே தனது உள்ளங்கையில் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டவர் அலெக் ஸாண்டர். ஒவ்வொரு நாடாக கைப்பற்றி வந்த அலெக்ஸாண்டர், தனது படையுடன், பாக்தாத் நகரை கடந்த போது, மெசபடோமியாவையும், பாபிலோனிய நகரத்தின் அழகையும் பார்த்து அசந்து போனார்.

அங்குள்ள தொங்கும் தோட்டத்தில் இருந்த பாக்கு, ஈச்ச மரங்கள் பற்றி இவர்கள் கதை கதையாய் சொன்னதாக வரலாற்று குறிப்புகள் தெரி விக்கின்றன. நேபுகாத்னேச்சரின் அரண் மனை, தொங்கும் தோட்டம், பாபிலோனிய நகரத்து எல்லைக் காவல் சுவர் போன்றவை பற்றி அவர்கள் சொல்லியதை, இன்றைய வரலாற்று ஆசிரியர்களும் விரும்பித்தேடி ஆராய்ந்து வருகின்றனர்.

மழையே பெய்யாத இடத்தில் எப்போதும் பசுமை தாலாட்டும் தோட்டத்தை உருவாக்குவது என்றால் அவ்வளவு சாதாரண காரியமா? பாலைவனமான பாபிலோனியாவில், குட்டி சோலைவனத்தை அமைக்க படாதபாடு பட்டனர். இதுவும் தாஜ்மகால் போலவே ராணி ஆசைபட்டதால், ராஜா அமைத்த தோட்டமே தொங்கும் தோட்டம்!

பாபிலோனிய பேரரசின் புகழ்மிக்க அரசர்களில் ஒருவரான இரண்டாம் நேபுகாத்னேச்சர், தனது காதல் மனைவி அமைடிஸின் ஆசையை பூர்த்தி செய்ய இந்த தொங்கும் தோட்டத்தை அமைத்தார். அமைடிஸ், பாபிலோனியாவின் பக்கத்து நாடான மெடஸ் நாட்டு இளவரசி. தனது எல்லையை விரிவாக்கிய இரண்டாம் நேபுகாத்னேச்சர், அமைடிஸின் தந்தையுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, அமைடிஸ் ராணியானாள்.

தனது நாட்டில் மலைவளம், இயற்கைவளம் என பசுமையான சூழலில் வாழ்ந்த அமைடிஸுக்கு பாபிலோனியாவின் வறட்சி பிடிக்கவில்லை. இதனால் தனது தாய் வீட்டைப் பற்றிய நினைவோடு இருந்தாள். இதை புரிந்து கொண்ட மன்னன், அவளுக்காகவே இந்த தோட்டத்தை அமைத்தான். இங்கு அடுக்கடுக்கான வரிசைகளில் மெத்தெனும் பசும்புல், மலர், செடி, கொடிகளுடன் மரங்களும் அமைந்திருக்கின்றன.

இதனால் எந்த நேரமும் நல்ல மணமும், குளிர்ந்த தென்றலும் தவழும் இடமாக இருக்கிறது. தோட்டத்தின் நுழைவாயிலில் தொடங்கி படிப்படியாக மேலேறி உச்சிக்கு போக தனியாய் படிகளும் இருந்தன. தோட்டத்தின் உச்சியிலிருந்து பாபிலோனிய நகரின் அழகை முழுமையாக பார்க்க முடியும்!
_______________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
ஒருவர்: ஏங்க இப்படிக் கடற்கரைல உக்காந்துகிட்டுக் கன்னாபின்னான்னு எல்லாரையும் குறைசொல்லிக்கிட்டிருக்கீங்க?

மற்றவர்: "காற்றுள்ளபோதே தூற்று"ன்னு சொல்லியிருக்காங்களே, அதுதான்!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Wednesday, September 12, 2007

Very Good Morning.

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought "we are destitute."
______________________________________________________

சூரியனின் வாழ்நாள்!

சூரியனின் மொத்த வாழ்நாள் 1000 கோடி ஆண்டுகள். இதில் ஏற்கனவே 500 கோடி ஆண்டுகள் முடிந்து விட்டன. மீதி இருப்பது 500 கோடி ஆண்டுகள் தான். நமது கார் ஓடுவதற்கு எரிபொருள் ஊற்றுகிறோமே, அது போல சூரியனுக்கும் எரிபொருள் உண்டு. அது தான் ஹைட்ரஜன் + ஹீலியம் மற்றும் கார்பன் கலவை. வாகனத்தில் எரிபொருள் தீருவது போல சூரியனுக்கும் எரிபொருள் ஒரு நாள் தீரும். என்ன வித்தியாசம்? வாகனத்தில் எரிபொருள் மீண்டும் ஊற்றமுடியும். ஆனால் ஐந்நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் சூரியனில் ஹைட்ரஜன் + ஹீலியம் மற்றும் கார்பன் கலவையோ வேறு எந்த மாற்று திரவமோ ஊற்ற முடியாது. சூரியனில் எரிபொருள் தீரும் போது வீங்கி, அதன் வெம்மைத் தாங்காமல் மற்ற கிரகங்களும், முக்கியமாக பூமி வெந்து சாம்பலாகிவிடும். ஒரு புல் பூண்டு கூட அதன்பின் மிஞ்சாது என்பது தான் உண்மை.

மற்ற எல்லா எரிபொருட்களில் இருந்து கிடைக்கும் சக்தியை விடக் கூடுதலாக 20,000 மடங்கு சக்தியை சூரியன் தினமும் பூமியின் மீது பொழிகிறது. ஒரு ஏக்கர் நிலத்திற்கு 4,000 குதிரைத்திறன் வேகமுள்ள சக்தி கிடைக்கிறது.சூரியன் ஒரு நட்சத்திரம். பூமியின் எடையை விட அதன் எடை 3,30,000 மடங்கு அதிகம். பூமியிலிருந்து 9,30,00,000 மைல்களுக்கு அப்பாலிருந்து சூரிய ஒளி பூமியை வந்து அடைகிறது. இது மின்காந்தக் கதிர்வீச்சாக அமைகின்றது. சூரியனின் மையத்தின் வெப்பநிலை & 3 கோடி டிகிரி பாரன்ஹீட். அதன் ஒளிவட்டத்தின் வெப்பம் 20 லட்சம் டிகிரி பாரன்ஹீட்; மேற்பரப்பு 10,000 டிகிரி பாரன்ஹீட்.நேரடியாக சூரியக் கதிர் விழும் ஒரு சதுர கெஜ பரப்பில் 2 குதிரைத் திறன் வேகமுள்ள கதிர்வீச்சு இருக்கும். பூமியை நோக்கி வரும் சூரிய சக்தியில் 30 சதவிகிதம் வாயு மண்டலத்தில் பட்டு உடனே பிரதிபலித்து திரும்பி விடுகிறது. 47 சதவிகிதம் வாயு மண்டலத்தினாலும் தரையினாலும் உறிஞ்சப்படுகிறது. சுமார் 33 சதவிகிதம் காற்றில் சலனத்தை உண்டு பண்ணுகிறது. இதைவிடக் குறைவான அளவு 4,000 கோடி கிலோவாட் சக்தியானது தாவரங்களின் ஒளிச் சேர்க்கைக்குப் பயன்படுகிறது. இந்த ஒளி எரிபொருட்கள் உற்பத்திக்குத் துணைசெய்கிறது. இந்த சூரிய சக்தியானது நமக்கு எல்லா இடத்திலும் இலவசமாகக் கிடைப்பதால் எரிபொருளை ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
______________________________________________________

இன்றைய நகைச்சுவை
-----------------------------------
உங்க குடும்பம் ஒரு கோவிலா, அவ்வளவு மரியாதையா ?

எப்போ போனாலும் கண்டிப்பா அர்ச்சனை இருக்கும்.

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Tuesday, September 11, 2007

Very Good Morning.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.)
_____________________________________________________________

* 14-வது மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை? - 102 கோடி.

* இந்தியாவில் விமானப் பயணம் தொடங்கிய ஆண்டு? - 1911ம் ஆண்டு.

* "ஐரோப்பாவின் நோயாளி'' என்று அழைக்கப்படும் நாடு? - துருக்கி.

* அணுசக்தி தயாரிக்க உதவும் மூலப் பொருட்கள் எவை? - யுரேனியம் மற்றும் தோரியம்.

* காந்தாரக் கலைக்கு ஆதரவு அளித்த முகலாய மன்னர்? - அக்பர்.

* சூரியக் கடவுள் ஆலயம் எங்குள்ளது? - கோனார்க்.

* அதிக அளவில் காப்பி உற்பத்தி செய்யும் நாடு? - பிரேசில்.

* சிந்து சமவெளி மக்களின் எழுத்து முறை? - சித்திர எழுத்து முறை.

* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்து? - புரதம்.

* பாம்புக்கான விஷப்பல் எந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது? - நீலி.

* பழங்காலத்தில் விதர்ப்ப தேசம் என்று அழைக்கப்பட்ட மாநிலம் எது? - பீகார்.

* இந்தியாவின் இரண்டாவது செயற்கை கோள்? - பாஸ்கரா.
_____________________________________________________________

இன்றைய நகைச்சுவை
-----------------------------------
கோச் : அவ்வளவு ஊக்க மருந்து எடுத்துக்கிட்டும் எப்படி உன்னால ஓட்டப்பந்தயத்துல பதக்கம் எடுக்க முடியாம போச்சுன்னு தெரில்ல."

வீரர் : அங்கதான் என்னோட புத்திசாலித்தனம் இருக்கு முதல்ல வந்திருந்தா நான் மருந்து எடுத்துக்கிட்டது தெரிஞ்சுருக்கும் அதனால கடைசியா வந்தா சந்தேகம் வராது பாருங்க."

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Monday, September 10, 2007

Very Good Morning.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
 
Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.
___________________________________________________________

* பசிபிக் கடலில் உள்ள சில மீன்கள் பஞ்ச வர்ணங்களில் உள்ளன. "கிளி மீன்கள்'' என்று இவைகள் அழைக்கப்படுகின்றன. இவற்றின் பற்கள் கிளியின் அலகு போல, உதட்டுக்கு வெளியே நீண்டு கொண்டிருக்கும். இவைகள் சங்கு, கிளிஞ்சல் போன்றவைகளை விழுங்கி தொண்டையில் வைத்துக் கொண்டு பின்னர் நொறுக்கி சாப்பிடுகிறதாம்.

* ஆஸ்திரேலியாவில் உள்ள கோலா எனப்படும் கரடி இனம் தண்ணீரே குடிப்பதில்லை. வெறும் யூகலிப்டஸ் மரத்தின் பட்டையைத் தின்றே உயிர் வாழ்கிறது.

* உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வாழ்பவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அப்பாவின் பெயரைத்தான் இனிஷியலாகப் போடுகிறார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டில் மட்டும் அம்மாவின் பெயரை இனிஷியலாகப் பயன்படுத்துகிறார்கள்.

* நாம் முகவரியுடன் சேர்த்து பின்கோடையும் குறிப்பிடுவோம். இதில் உள்ள 6 எண்களில் முதல் எண் மாநிலத்தையும், அடுத்த இரண்டு எண்கள் துணை வட்டத்தையும், கடைசி 3 எண்கள் குறிப்பிட்ட தபால் நிலையங்களையும் குறிக்கிறது.

* ஐரோப்பாவில் ஏவப்படும் ராக்கெட்டுகள் "ஏரியன்'' என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. `ஏரியன்' என்பதற்கு ராக்கெட் என்பது பொருள்.

* ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள போர்த் என்னும் ரெயில்வே பாலம் குளிர்காலத்தில் இருப்பதைவிட கோடை காலத்தில் ஒரு மீட்டர் அதிகமாய் நீண்டு காணப்படுகிறதாம்.

* பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த நிலை கோபுரத்தைப் போல, வேறு சில கோபுரங்களும் இருக்கின்றன. 1560-ம் ஆண்டில் ருமேனியாவில் கட்டப்பட்ட கோபுரம் ஒன்றும், 1573-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டில் கட்டப்பட்ட பெரிய கோபுரம் ஒன்றும், பைசா நகரக் கோபுரம் போல சாய்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறது.
___________________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
கமலாவும் கோகிலாவும் கடைத்தெருவில் சந்தித்துக் கொண்டார்கள்.
கமலா: அலுப்பா இருக்குடி. ஒரு நாளானாலும் சமையலைக் குறை சொல்லாம சாப்பிடறதே இல்லை இந்த மனுஷன்!

கோகிலா: அடப் பாவமே! எப்படித்தான் தாங்கிக்கறியோ நீ! அவரை ஏன்னு கேக்கமாட்டியா?

கமலா: அவர் பண்ற சமையலை அவரே குறை சொல்லிகிட்டா நான் எதுக்குடீ கேக்கணும்!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Friday, September 7, 2007

Very Good Morning.

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
 
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.
______________________________________________________________

* செக்கோஸ்லோவாக்கியாவில் உள்ள ஸ்டேடியம் தான் உலகிலேயே மிகவும் பெரியது. இதில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை கண்டு களிக்க முடியும். 40 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கள் திறமைகளை காண்பிக்க முடியும்.

* கிரிக்கெட்டில் 100 ரன்களை எட்டிப் பிடித்தால் சதம் (செஞ்சுரி) அடித்தார் என்று கூறுவதைப் போல, 'கேரம்' விளையாட்டிலும் `செஞ்சுரி' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதாவது கேரத்தில் சிவப்பு நிறக் காயைத் தொடர்ந்து, 9 கருப்பு அல்லது 9 வெள்ளை நிறக் காய்களை வீழ்த்துவது `சதம்' என்று அழைக்கப்படுகிறது.
______________________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
நீங்க வருமானத்துக்கு மேலே சொத்து சேர்த்திருக்கிறதா பேசிக்கறாங்களே ..?

ஐயையோ .. .. அது பச்சைப் பொய் எனக்கு வருமானமே கிடையாது. சொத்து மட்டும்தான் சேர்க்கறேன் !

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Thursday, September 6, 2007

Very Good Morning.

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
 
Never have the envious become great; never have those who are free from envy been without greatness.
___________________________________________________________

நாட்டு மக்களுக்கு சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும், "பாரத ரத்னா' விருதை முதன் முதலாக பெற தேர்வு செய்யப்பட்டவர், உலக பல்கலைக்கழகங்களில் 17 டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர்...

"அவர் ஒரு பெரிய ஆசிரியர். அவரிடமிருந்து ஏராளமாக கற்றுக் கொள்ளலாம்...' என நேருவால் புகழப்பட்டவர், இதனால்தான் தேசிய ஆசிரியர் கழகத்தின் கோரிக்கைக்கு இணங்க இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தனை சிறப்பிற்கும் உரியவர்தான் சர்வ பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். அவர் செப்., 5, 1888ல் வீராசாமிசீதம்மாள் தம்பதிகளுக்கு மகனாக திருத்தணியில் பிறந்தார். பெற்றோர் ஆந்திர மாநிலத்தின் நலகொண்டா பகுதி "சர்வ பள்ளி"யை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இதனாலேயே இவர், "சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன்" என்று அழைக்கப்படுகிறார். திருத்தணியில் பள்ளிப் படிப்பையும், வேலுரில் உயர்நிலைக் கல்வியை முடித்து, சென்னை கிறிஸ்துவ கல்லுரியில் தத்துவப் பாடத்தை முக்கிய பாடமாக கொண்டு எம்.ஏ., பட்டம் பெற்றார். சென்னை மாநிலக் கல்லுரியில் 1908ல் தர்க்க இயல் உதவி பேராசிரியராகத் தன் ஆசிரியர் பணியை துவங்கி, 9 ஆண்டுகள் பணி புரிந்தார்.

தன் மாமன் மகள் சிவகாமியை மணம் முடித்தார். அவர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற பல விதங்களில் உதவினார். மைசூர் பல்கலை கழகத்தில் 1918ல் தத்துவ பாட பிரிவில் பேராசிரியராக பதவி ஏற்றார். அப்போது, "பிலாசபி ஆப் ரவீந்திரநாத்" என்ற நுலை எழுதி, தாகூரின் பாராட்டை பெற்றார். அதோடு இந்தியாவிலுள்ள எல்லாப் பல்கலைக் கழகங்களும் ராதாகிருஷ்ணனைப் பணியமர்த்த விரும்பின. அந்தளவு அவரின் புகழ் எங்கும் பரவியது.

கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போது, "ஆச்சார்ய" பட்டம் வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் பேரரசின் தத்துவதுறை மாநாடு 1926ல் நடந்தபோது இந்தியா சார்பில் கலந்து கொண்டார். டாக்டர் ராதாகிருஷ்ணன் மடை திறந்த வெள்ளம் போல ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் வாய்ந்தவர். இதையறிந்த பிரிட்டிஷ் அகாடமி இவரைச் சொற்பொழிவாற்ற அழைத்தது. ஆசியக் கண்டத்திலிருந்து இங்கு பேசச் சென்ற முதல் மனிதர் இவரே.
___________________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
"வேகத்தடையில போற பஸ் மாதிரி ஏங்க இந்த விமானம் ஆடி, ஆடி போகுது?"

"இங்கே மேகத்தடை ஜாஸ்தியா இருக்காம்..."

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Wednesday, September 5, 2007

Very Good Morning.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
 
The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.
____________________________________________________

அதிசயம்.. ஆனால் உண்மை..
-----------------------------------------------
விலங்கினத்தில் தாண்டத்தெரியாத ஒரே உயிரினம்... யானை..!

ஒவ்வொரு கண்டத்தின் பெயரும் துவங்கும் எழுத்திலேயே முடிகின்றன.
[ஆங்கிலத்தில் எழுதும்போது]

ஸ்காட்லாந்தில் பேசப்படும் கயேலிக் என்னும் மொழியில், ஆம் என்பதற்கும், இல்லை என்பதற்கும் வார்த்தைகளே இல்லை..!

'ரோம்' எனும் பெயரில் ஒவ்வொரு கண்டத்திலும் குறைந்தது ஒரு நகரமாவது இருக்கிறது..!

சிவப்பு நிறத்தைப் பார்த்தால் காளைகள் வெறிக்கும் என்பது தவறு.. ஏனெனில் அவை நிறக்குருடுகள்..!

கால் நகங்களைவிட கை விரல் நகங்கள் 4 மடங்கு அதிகமாக வளரும்..!

முதன்முதலில் பார் கோட் எனப்படும் வணிகக்குறி இடப்பட்ட பொருள்.. ரிக்லியின் பபுள் கம்..!
____________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
யாரோ எனக்கு மொய் எழுதினவன் கவரில் காலமெல்லாம் உன் மனைவிக்கு சமைச்சுப் போட்டு துணிமணி துவைத்துப் போட்டு அடிமையா இருக்கப்போறே-னு எழுதியிருக்கான் ..

அவர் மெய் எழுதியிருக்கார்னு சொல்லுங்க ..

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Tuesday, September 4, 2007

Very Good Morning.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
 
Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)
_______________________________________________________

1, ...2, ...3, ...4, ....5,....6, ....7,....8, ....9, ....10.
************************************************

* ஒரு செல் உயிரினம் அமீபா.

* இரண்டு தலைநகர் கொண்டது ஜம்மு-காஷ்மீர்.

* மூன்று வயிறுள்ள விலங்கு ஒட்டகம்.

* நான்கு வேதங்கள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம்.

* ஐந்து வைட்டமின்கள் அடங்கிய பழம் வாழைப் பழம்.

* ஆறு கால்கள் கொண்டவை பூச்சியினம்.

* ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது ரோம்.

* எட்டு நூல்களின் தொகுப்பு எட்டுத் தொகை.

* ஒன்பது கோள்களை உடையது சூரிய குடும்பம்.

* பத்து கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது பைபிள்.
_______________________________________________________

* உலகிலேயே மிகப் பெரிய கார் பார்க்கிங் கனடாவிலுள்ள எட்மாண்டன் நகரில் உள்ளது.

* உலகிலேயே மிகப் பெரிய ஓட்டல் அமெரிக்காவிலுள்ள ஹில்டன் ஓட்டல்.

* உலகிலேயே மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் உள்ள கேப்பிட்டல் ஹில்.

* உலகிலேயே மிகப் பெரிய மசூதி சிரியா நாட்டில் உள்ள உமய்யாத் மசூதி.
_______________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
இந்தம்மா பையனுக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே. பின்னே இவங்களை ஏன் மருமகளைக் கொடுமை படுத்தியதாக அரெஸ்ட் பண்றாங்க ?

பையன் காதலிக்கற ஸ்டேஜ்'லியே அவன் காதலியை இவங்க கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்களாம் ..!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Monday, September 3, 2007

Very Good Morning.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
 
Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.
_____________________________________________________________

காப்பி குடிங்கப்பா..!

புற்றுநோயைத் தவிர்க்க பழங்களும், காய்கறிகளுமே முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதற்கு சமமாக காப்பியை இப்போது சிபாரிசு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது காப்பி குடிக்க வேண்டுமாம்.

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் "ஆண்டி ஆக்சிடென்ட்" காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது. குறிப்பாக ஆப்பிள், தக்காளி போன்றவற்றில் இந்த "ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்" உள்ளதால் அதை சாப்பிட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவந்தனர். ஆனால் இப்போது காப்பியிலும் "ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்" உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். காய்கறி, பழங்களில் இருப்பதற்கு ஈடாக காப்பியிலும் உள்ளது என்று கூறுகின்றனர்.

அமெரிக்காவில், பென்சில்வேனியா நகரில் உள்ள ஸ்க்ராண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோ வின்சன் இதுபற்றி ஆராய்ந்து சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர். "மற்ற உணவுகளில் உள்ள "ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்" அளவு போதுமானதாக இருந்தாலும், அவை உடலில் கழிவாக ஓரளவு போய்விடுகிறது. ஆனால் காப்பியில் உள்ள "ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்" அளவு, உடலில் எந்த சூழ்நிலையிலும் கரையாமல் அப்படி பலன் தருகிறது." என்று கூறினார்.

"புற்றுநோய்க்கு மட்டுமல்ல, இரண்டாம் வகை சர்க்கரை நோய், பர்கின்சன் நோய் போன்றவை வராமல் தடுக்கவும் காப்பி பயன்படுகிறது. ஒரு நாளைக்கு நாலைந்து முறை முறை காப்பி குடிப்பது நல்லது தான். ஆனால் காப்பி பிடிக்காதவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது காபி குடிப்பது நல்லது. காப்பின் எடுத்த காபியாக இருந்தாலும் சரி, காப்பின் அகற்றாத காப்பியாக இருந்தாலும் சரி, அதில் "ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்" உள்ளது." என்றும் பேராசிரியர் வின்சன் கூறினார்.

பிரிட்டிஷ் காபி தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுகையில், "காபி குடிப்பது என்பது கெடுதல் இல்லை. அப்படி சிலர் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு நான்கு, ஜந்து முறை காப்பி குடித்தால் கூட நல்லது தான் என்று நிபுணர்களே கூறிவிட்டனர். பழம், காய்கறிகளை உணவில் சரிவர சேர்க்க விரும்பாதவர்கள், குறைந்த பட்சம் காப்பி குடித்தாவது நோய்களை தவிர்க்கலாம்" என்று கூறியுள்ளது.
_____________________________________________________________

இன்றைய நகைச்சுவை
-----------------------------------
என்னங்க.. பக்கத்து வீட்டுப் பங்கஜத்திடம் பேசிவிட்டு ஐந்து நிமிடத்தில் வந்துடறேன் நீங்க அரை மணிக்கு ஒரு தரம் அடுப்பில் இருக்கறதை கிண்டிவிட்டுடுங்க !

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Friday, August 31, 2007

Very Good Morning.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
 
He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.
_______________________________________________________

* அமெரிக்காவில் நடந்த ஆய்வில், அமெரிக்கர்களைவிட அங்கு குடியேறிய இந்தியர்களுக்குத்தான் அதிக மாரடைப்பு ஏற்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.

* இதயத்திற்கு சூரியகாந்தி எண்ணெயைவிட தவிட்டு எண்ணெய் மிகவும் நல்லது.

* வாழைப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பக்கவாதம், மாரடைப்பு, இதயக்கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். (நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது!)

* எலுமிச்சம்பழச் சாற்றில் இரண்டு மடங்கு பன்னீர் கலந்து காலை, மாலை நன்றாக வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் வீக்கம், பற்களில் சீழ்வடிதல் நிற்கும்.

*  மனிதனால் 52 `டால்ஸ்' (வலியின் அளவீட்டு அலகு) வலிக்கு மேல் தாங்க முடியாது. ஆனால் ஒரு தாய், பிரசவத்தின்போது 60 `டால்ஸ்' வலியைத் தாங்கி குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.

* ஒரு தேக்கரண்டி வினீகரை ஒரு தம்ளர் நீரில் கலந்து கொள்ள வேண்டும். அந்நீரை தொண்டை வரை ஊற்றிக் கொப்பளித்துவிட்டு பிறகு குடித்தால் தொண்டை சரியாகும். அல்லது கொஞ்சம் உப்பு எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் வெதுவெதுப் பான நீரில் கலந்து தொண்டைவரை ஊற்றிக் கொப்பளிக்க வேண்டும். அல்லது பாதாம் பருப்பை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டாலும் தொண்டை எரிச்சல் சரியாகும்.
_______________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
அடியே மங்களம்.. நான் 100 வயசு வரைக்கும் இருப்பேன்னு ஜோசியர் சொன்னாருடி..

ஓஹோ.. நானா.. அந்த ஜோசியனான்னு ரெண்டுல ஒன்னு பார்த்துடறேன்..!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Thursday, August 30, 2007

Very Good Morning.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்றார்
வழுக்கியும் கேடீன் பது.
 
To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction.
___________________________________________________________

யு.எஸ் ஓபன்
---------------------
தொடர்ச்சியாக அதிக முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றவர்கள்.

ஆண் ; ஜிம்மி கானர்ஸ் 12 முறை. 1974- 86.

பெண் ; க்ரிஸ் எவெர்ட் 16 முறை. 1971- 86.
------------------------------------------------------------------
யு.எஸ் ஓபனில் அதிக முறை விளையாடியவர்கள்.

ஆண் ; விக் செய்க்ஸாஸ் 28 முறை. 1940-42, 44, 46-69.

பெண் ; மார்ட்டினா நவரத்திலோவா 21 முறை. 1973-93.
-------------------------------------------------------------------
மிக இளம்வயதில் ஒற்றையர் வாகையர் பட்டம் வென்றவர்.

ஆண் ; பீட் சாம்ப்ராஸ்.(1990) 19 வயது, 28 நாட்கள்.

பெண் ; ட்ரேசி ஆஸ்டின். (1979) 16 வயது, 8 மாதம், 28 நாட்கள்.
--------------------------------------------------------------------
பரிசுத் தொகை.

Winners $ 1,400,000

 Runners-Up     700,000

 Semifinalists  300,000

 Quarterfinalists   150,000

 Round of 16    75,000

 Third Round    43,000

 Second Round   27,500

 First Round    17,500

 TOTAL (128)    $ 13,176,000 [ஆண்கள்+பெண்கள்]
___________________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
உங்க கிராமத்துல அருவி இருக்கு, நீர்வீழ்ச்சி இருக்குன்னு சொன்னாங்க. தேடித் தேடிப் பாத்தோம். ஒண்ணையுமே காணுமே?

"யாரோ உங்களுக்கு ஃபால்ஸ் இன்பர்மேஷன் குடுத்திட்டாங்க!'

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Wednesday, August 29, 2007

Very Good Morning.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
 
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.
____________________________________________________________

இதயத்தின் செயல்பாட்டைக் கண்டறிந்தவர் வில்லியம் ஹார்வி (1628).

இதயம் 75 ஆண்டுகளில் சுமார் 3750 கோடி முறை துடிக்கிறது.

ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் தடவை துடிக்கிறது.

முதுமையில் இதயதசை பலவீனமடைகிறது. ஏனெனில் அப்போது குறைந்த அளவு இரத்தமே இதயத்துக்கு வருகிறது.

புகைப் பிடித்தல், குடிப்பழக்கம் ஆகியவை இதயத்தை மேலும் பாதிக்கும்.
____________________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
மிஸ்டர் மொக்கையும் நண்பரும் தொடர்வண்டியில் சென்றுகொண்டிருந்தார்கள். எதிரில் அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் இவர்களைப் பார்த்து இந்தியில் கேட்டார்..

தேரா நாம் க்யா..?

இருவரும் விழிக்க, அடுத்து மலையாளத்தில் கேட்டார்..

நிங்கள்ட நாமம் ஏதானு..?

இதுவும் புரியாமல் போகவே, பயணி கன்னடத்தில் வினவினார்..

நிம்ம ஹெசுரு ஏனு..?

இதற்கும் அருள் வடிவாக மொக்கை & கோ விழிக்கவே மனம் தளராத பயணி கேட்டார்..

மீ பேரு ஏமி..?

இதற்கும் பதில் இல்லை.. பயணி சோர்ந்துபோய் வேறுபுறம் திரும்பிக்கொண்டார்.
மிஸ்டர் மொக்கை நண்பரிடம் சொல்லலானார்..

இதுக்குதான் நான் எப்போவும் சொல்லிட்டு இருக்கேன்.. நமக்கு தமிழ் மட்டும் போதாது.. இன்னொரு மொழி கட்டாயம் தெரிஞ்சிருக்கணும்ன்னு..!

நண்பர் சொன்னார்..

நான் அப்படி நெனைக்கல..எதிரே இருக்கற ஆள் கூட 4 மொழி பேசறார்.. என்ன புண்ணியம்..? வேலைக்காகாம வெறுத்துப் போயி உக்காந்திருக்கார் பாரு..!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Tuesday, August 28, 2007

Very Good Morning.

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
 
Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth."
_____________________________________________________

மின்மினிப் பூச்சி எவ்வாறு ஒளியை உண்டாக்குகிறது?

மின்மினிப் பூச்சியின் அடிவயிற்றில் ஒரு வகையான உயிரணுக்கள் உள்ளன.

இதில் "லூசிபெரின்' என்ற ரசாயனப் பொருள் உள்ளது.

இந்த உயிரணுக்கள் மூச்சுக் குழலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மின்மினிப் பூச்சி மூச்சுவிடும் போது பிராண வாயுவுடன் அடிவயிற்றிலுள்ள லூசிபெரின் சேர்ந்து ஒளியை உமிழ்கிறது.

இச்செயல் நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறுகிறது. இது ஒரு உயிர் வேதியியல் செயலாகும்.
_____________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
ஒரு மனைவி தன் தோற்றத்தை நிலைக்கண்ணாடியில் பார்த்தபின் கணவனிடம் அலுத்துக்கொண்டாள்..

டார்லிங்.. எனக்கு ரொம்ப வயசாகுது போல இருக்கு.. தலையில் லேசா நரைமுடி தெரியுது.. உடம்புல ஒரு தொய்வு தெரியுது.. தாடைக்கு கீழே சதை போட்டிருக்கு.. முகத்தில் கொஞ்சம் சுருக்கம் வேற தெரியுது.. ப்ளீஸ்.. என்கிட்டே நல்லபடியா இருக்கும் விஷயம் என்னன்னு சொல்லுங்களேன்..

கணவன் சொன்னான்...

உன் கண்பார்வை சரியா இருக்கு டியர்..!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Monday, August 27, 2007

Very Good Morning.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
 
Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others.
________________________________________________

லண்டன்: மொபைல் போன், "சார்ஜ்' தீர்ந்து விட்டால், இனி கவலைப்பட வேண்டாம், இதயத்துடிப்பு மூலமே, "சார்ஜ்' செய்து கொள்ளலாம். ஆச்சரியமாக இருக்கிறதா, உண்மை தான் பிரிட்டன் விஞ்ஞானிகள், இது தொடர்பாக ஒரு கருவியை கண்டுபிடித்து சோதனை செய்து வருகின்றனர்.

இதய பாதிப்பு நோயாளிகளுக்கு, "பேஸ்மேக்கர்" கருவி, எப்படி இதயத்துடிப்பை சீராக்குகிறதோ, அதேபாணியில், மொபைல் போனுக்கும், "சார்ஜ்' செய்யும் வகையில் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

"பேஸ் மேக்கர்' கருவியில், பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் தான், "பேஸ்மேக்கர்' இயங்கி, இதயத்துடிப்பை பாதிப்பில்லாமல் வைத்திருக்கும். இந்த, "பேஸ் மேக்கர்' கருவியில், மிகச்சிறிய அளவில், "ஜெனரேட்டர்' கருவி உள்ளது. இதயத்துடிப்பின் அதிர்வை வைத்தும், மின்சக்தியை ஏற்படுத்தி, அதை பேட்டரிக்கு தருகிறது. இப்படி, "பேஸ் மேக்கரில்' சக்தி வாய்ந்த, "ஜெனரேட்டர்' இயங்கி, இதயத்துடிப்பு அதிர்வை வைத்து மின்சக்தியை ஏற்படுத்தும் போது, அதே பாணியில், ஏன் மொபைல் போனில், "சார்ஜ்' செய்ய முடியாது? என்று, எண்ணினர் விஞ்ஞானிகள்.

பிரிட்டனில் உள்ள சவுதாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்டீவ் பீபே தலைமையில் குழுவினர், இது தொடர்பாக ஆராய்ந்து வந்தனர். மொபைல் போன் மட்டுமல்ல, எம்.பி.3 மியூசிக் சிஸ்டம், ஐபாட் போன்றவற்றுக்கு கூட, இப்படிசிறிய அளவில், "ஜெனரேட்டர்' கருவியை பொருத்தி, அதன் மூலம் மொபைலுக்கு மின்சக்தியை தர முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

மொபைல் பயன்படுத்துவோர், "சார்ஜ்' செய்ய, தனியாக சார்ஜரை தேடாமல், சட்டை பாக்கெட்டில் வைத்திருந்தாலே போதும். பாக்கெட்டுக்கு அருகே உள்ள இதயத்தின் துடிப்பால், மொபைல் போனில் உள்ள, "ஜெனரேட்டர்' இயங்கி, மின்சக்தியை தந்து, "சார்ஜ்' செய்துவிடும். சோதனை முழு வெற்றி அடைந்தவுடன், இந்த நவீன முறை அமலுக்கு வரும்.
________________________________________________

இன்றைய நகைச்சுவை
-------------------------------------
ஒருவர் : போன வாரம் உங்க கடையில் வாங்கின பருப்புல பூச்சி விழுந்து ஓட்டையா இருக்கு.

மற்றவர் : ஏங்க! நீங்க கொடுத்த லிஸ்டில் இருந்ததைத் தான்கொடுத்தேன். பாருங்க... 'துவாரம்' பருப்பு 1 கிலோ-ன்னு எழுதியிருக்கு.

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

Friday, August 24, 2007

Very Good Morning.

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
 
Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.
_____________________________________________________

நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன.
(சுவாமி ராமகிருஷ்ணானந்தர்)

நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.
(ஷேக்ஸ்பியர்)

உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள்.
(லாங்பெல்லோ)

பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
(அரிஸ்டாட்டில்)

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே.
(அனுபவ வாக்கு)

மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், மற்றவர்களைக் சார்ந்தே வாழ்கிறான்.
(ஜார்ஜ் பெர்னார்டு ஷா)

எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கும்போது, ஒருவரும் நன்றாகச் சிந்திப்பதில்லை.
(விட்மன்)

சமுதாயத்தின் எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான் உள்ளது.
(டிபியன் போர்ட்)

உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
(ஷில்லாவகில்)

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல.
(வின்ஸ்ட்டன் சர்ச்சில்)

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்.
(காந்தியடிகள்)

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.
(ஓர் அனுபவசாலி)

இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும்.
(அரவிந்தர்)

கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்
(கிளெண்டல்)

என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும்.
(டொரோதி தெலூசி)

நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை.
(எமர்சன்)
_____________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
புத்திசாலியா இருந்தாலே பிரச்சனை சார் என் செருப்பு அறுந்து போயிடுது..

புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?

என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."