Friday, September 14, 2007

Very Good Morning.

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெ·கிப்
பொல்லாத சூழக் கெடும்.

If he, who through desire of the virtue of kindness abides in the domestic state i.e., the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish.
____________________________________________________________

பெண்மையைப் போற்றுவோம்..

ஓவ்வொரு துறையிலும் வெற்றிக்கொடி கட்டிய முதல் பெண்மணிகள் பட்டியல்

உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் - திருமதி ருக்மணி லெட்சுமிபதி

இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் - செல்வி பச்சேந்திரிபால்

இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் - திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - திருமதி கேப்டன் லெட்சுமி ஷேகல்

இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - 'சமுக சேவகி' அருந்ததிராய்

பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் - திருமதி எம். எஸ். சுப்புலெட்சுமி

இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் சம்பளம் பெற்ற பெண்மணி - திருமதி கே.பி. சுந்தராம்பாள்

ஆக்ஸிஜன் இல்லாமல் எவரேஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் வீராங்கனை - செல்வி பூதோர்ஜி

ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை - செல்வி ஆர்த்தி சாஹா

இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் தலைமை நீதிபதி - திருமதி லீலா சேத்

இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி - திருமதி பீம்லா தேவி
____________________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
உபயோகமில்லாத எந்தப் பொருளையும் தூக்கி உடனே வீசி விடாதீர்கள்.ஒருநாள் அது மிக உபயோகமாய் இருக்கும்.

உதாரணம் கங்குலி!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: