அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெ ஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.
If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness. ________________________________________________________________
கலர் கலராக சாப்பிடுங்க.. நோயைத் தடுங்க
பச்சை நிறம்: பீன்ஸ், பாகற் காய் போன்ற பச்சை காய்கறிகளிலும், கீரை வகைகளிலும் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ் நம் கண்ணில் வரக் கூடிய பலவித மான பிரச்சனைகளையும், கான்சர்ரையும் தடுக்க வல்லது. அதிலும் குறிப்பாக பிராக்கோலியில் உள்ளசல்போரபேன் நம் உடம்பில் எதிர்ப்பு சக்தியை கூட்டி விடும். அதோடு எல்லாவித கான்சரையும் விரட்ட கூடிய சூப்பர் மேன் பிராக்கோலி தான்.
ஆரஞ்சு நிறம்: கேரட், பூசணி, பப்பாளி போன்றவற்றில் காணப்படும் ஆல்ஃபா கரோட்டீன், பீட்டா கரோட்டீன் போன்ற சத்துக்கள், கான்சர் தலைவைத்தும் படுக்காது. பப்பாளி தினமும் ஒரு கப் சாப்பிட்டு வந்தால், வைட்டமின் சி தேவையான அளவு கிடைக்கும், புண்களையும் சீக்கிரம் ஆற்றும்.
பிரவுன் நிறம்: உடம்பிள்ள கழிவுகள் வெளியேற வில்லை என்றால் விஷமாக உடம்பில் தங்கிவிடும். இந்த விஷத்தை விரட்டுவதுநார்சத்து மிகுந்த தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பிரட் வகைகள் தான். அதோடு வைட்டமின் பி யும் கிடைக்கும்.
சிவப்பு நிறம்: இரவிலும் கண்கள் பளிச் என தெரிய வேண்டுமா?. அப்படினா தக்காளி, கெச்சப், ஸ்ட்ரா பெர்ரி போன்ற சிவப்பு நிற பழங்களை சாப்பிடனும். அதொடு இதிலுள்ள லைகோபென், மார்பக புற்று நோய்களுக்கு BYE சொல்லி விடும். வயலெட் நிறம்: லங் கான்சர் என்னும் வில்லன் பயப்படும் ஹீரோ யார் தெரியுமா?. ஊதா நிற காய்கறிகள் தான்.கத்தரிக்காய், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற காய்கற்கள் தான்.
உடனடி சக்தி பெற: அன்னாசி பழம் 3 துண்டுகள், ஒரு வாழைப் பழம், 6 ஃபிரஷ்ஷான ஸ்ட்ராபெர்ரி மற்றும் முலை விட்ட கோதுமை ஒரு பிடி, இவை 4-ம் சேர்த்து ஜூஸ் செய்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான சக்தி உடன் கிடைத்து விடும். ________________________________________________________________
இன்றைய நகைச்சுவை ---------------------------------------- அப்பா : ஏண்டா சின்னா.. ஒரு மாசமா பள்ளிக்கு போய் வரியே.. பிடிச்சிருக்கா..?
சின்னா : போறது பிடிச்சிருக்கு.. வர்றது ரொம்பப் பிடிச்சிருக்கு.. நடுவில வெட்டித்தனமா ஒரு 5 மணி நேரம் அங்க உக்காந்து தொலைக்க வேண்டியிருக்கு.. அதுதாம்பா பிடிக்கல..!
-- Regards, Rajesh Prabhu. R
"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
0 comments:
Post a Comment