இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்.
The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought "we are destitute." ______________________________________________________
சூரியனின் வாழ்நாள்!
சூரியனின் மொத்த வாழ்நாள் 1000 கோடி ஆண்டுகள். இதில் ஏற்கனவே 500 கோடி ஆண்டுகள் முடிந்து விட்டன. மீதி இருப்பது 500 கோடி ஆண்டுகள் தான். நமது கார் ஓடுவதற்கு எரிபொருள் ஊற்றுகிறோமே, அது போல சூரியனுக்கும் எரிபொருள் உண்டு. அது தான் ஹைட்ரஜன் + ஹீலியம் மற்றும் கார்பன் கலவை. வாகனத்தில் எரிபொருள் தீருவது போல சூரியனுக்கும் எரிபொருள் ஒரு நாள் தீரும். என்ன வித்தியாசம்? வாகனத்தில் எரிபொருள் மீண்டும் ஊற்றமுடியும். ஆனால் ஐந்நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் சூரியனில் ஹைட்ரஜன் + ஹீலியம் மற்றும் கார்பன் கலவையோ வேறு எந்த மாற்று திரவமோ ஊற்ற முடியாது. சூரியனில் எரிபொருள் தீரும் போது வீங்கி, அதன் வெம்மைத் தாங்காமல் மற்ற கிரகங்களும், முக்கியமாக பூமி வெந்து சாம்பலாகிவிடும். ஒரு புல் பூண்டு கூட அதன்பின் மிஞ்சாது என்பது தான் உண்மை.
மற்ற எல்லா எரிபொருட்களில் இருந்து கிடைக்கும் சக்தியை விடக் கூடுதலாக 20,000 மடங்கு சக்தியை சூரியன் தினமும் பூமியின் மீது பொழிகிறது. ஒரு ஏக்கர் நிலத்திற்கு 4,000 குதிரைத்திறன் வேகமுள்ள சக்தி கிடைக்கிறது.சூரியன் ஒரு நட்சத்திரம். பூமியின் எடையை விட அதன் எடை 3,30,000 மடங்கு அதிகம். பூமியிலிருந்து 9,30,00,000 மைல்களுக்கு அப்பாலிருந்து சூரிய ஒளி பூமியை வந்து அடைகிறது. இது மின்காந்தக் கதிர்வீச்சாக அமைகின்றது. சூரியனின் மையத்தின் வெப்பநிலை & 3 கோடி டிகிரி பாரன்ஹீட். அதன் ஒளிவட்டத்தின் வெப்பம் 20 லட்சம் டிகிரி பாரன்ஹீட்; மேற்பரப்பு 10,000 டிகிரி பாரன்ஹீட்.நேரடியாக சூரியக் கதிர் விழும் ஒரு சதுர கெஜ பரப்பில் 2 குதிரைத் திறன் வேகமுள்ள கதிர்வீச்சு இருக்கும். பூமியை நோக்கி வரும் சூரிய சக்தியில் 30 சதவிகிதம் வாயு மண்டலத்தில் பட்டு உடனே பிரதிபலித்து திரும்பி விடுகிறது. 47 சதவிகிதம் வாயு மண்டலத்தினாலும் தரையினாலும் உறிஞ்சப்படுகிறது. சுமார் 33 சதவிகிதம் காற்றில் சலனத்தை உண்டு பண்ணுகிறது. இதைவிடக் குறைவான அளவு 4,000 கோடி கிலோவாட் சக்தியானது தாவரங்களின் ஒளிச் சேர்க்கைக்குப் பயன்படுகிறது. இந்த ஒளி எரிபொருட்கள் உற்பத்திக்குத் துணைசெய்கிறது. இந்த சூரிய சக்தியானது நமக்கு எல்லா இடத்திலும் இலவசமாகக் கிடைப்பதால் எரிபொருளை ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ______________________________________________________
இன்றைய நகைச்சுவை ----------------------------------- உங்க குடும்பம் ஒரு கோவிலா, அவ்வளவு மரியாதையா ?
எப்போ போனாலும் கண்டிப்பா அர்ச்சனை இருக்கும்.
-- Regards, Rajesh Prabhu. R
"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
0 comments:
Post a Comment