A Carputer, or 'CarPC', is a general purpose computing platform installed in a vehicle. காரில் போய் கொண்டிருக்கின்றீர்கள். யாரோ மொபைல்போனில் அழைத்து hypervisor பற்றி கேட்கின்றார்கள். ஒன்றும் புரியவில்லை.கூகிள் செய்தால் நன்றாயிருக்கும் போல் தோன்றுகின்றது.கணிணிக்கு எங்கே போக.கையறு நிலை. அப்படியே உங்கள் பிளாக்பெரியை தீண்டாமல் மெயில் செக்செய்யவும் வசதியிருந்தால் எப்படியிருக்கும். அதற்கு உதவுகின்றது இந்த கார் பி.ஸி.(Car PC or Auto PC).இக்கணிணி உங்கள் காரின் டேஷ்போர்டின் ஒர் அங்கமாகிவிடும். கூடவே வயர்லெஸ் இணைப்பு வசதியும் இருப்பதால் இணையத்தோடு அதை இணைத்துவிடலாம்.இதை Carputer கார்பியூட்டர் என்கின்றார்கள்.இக்னீசியன் கொடுக்கும் போதே அது பூட்டாக தொடங்கிவிடுமாம். டச் ஸ்கிரீனுடன் மொத்த கணிணிவசதியோடு கூடவே ஆடியோ,வீடியோ,ஜிபிஎஸ்,காரை சோதிக்கும் மென்பொருள்கள்,சேட்டலைட் ரேடியோ இன்னும் பிற ஜிகினாக்களோடு இது வருவதால் பார்க்க நன்றாயிருக்கின்றது. சீக்கிரத்தில் இதுவும் Builtin ஆக வாகனங்களில் வரலாம்.வந்திருக்கலாம். கூடவே நாம் தினமும் செய்யும் சில கணிணி சார் செயல்களை மின்னஞ்சல் பார்த்தல்,காலெண்டர் பார்த்தல்,சிஎன்என் போகுதல் போன்றவற்றை ஸ்டடி செய்து அதை தானாகவே தினமும் செய்யும் மென்பொருள் ஒன்று இருந்தால் நன்றாயிருக்கும்.அவாள் எல்லா மவுஸ் நகர்தலையும்,கிளிக்குகளையும் செய்ய நாம் திரையை பார்த்து கொண்டே இருக்கலாமே. அப்படியே கூகிள் மெயில் போவென குரலால் கட்டளை கொடுத்தால் அது தானாவே கூகிள் மெயில் போய் மெயில் செக்பண்ணிணால் Carcomputing-க்கு இன்னும் சவுகரியம். எது வேண்டுமானாலும் நடக்கலாம் இவ்வுலகில். Reference: http://en.wikipedia.org/wiki/Carputer |
Wednesday, August 29, 2007
Daily Word - Carputer
Posted by Prakash at 6:50 PM
Labels: Daily Word, Latest Trends
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment