Wednesday, August 29, 2007

Very Good Morning.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
 
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.
____________________________________________________________

இதயத்தின் செயல்பாட்டைக் கண்டறிந்தவர் வில்லியம் ஹார்வி (1628).

இதயம் 75 ஆண்டுகளில் சுமார் 3750 கோடி முறை துடிக்கிறது.

ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் தடவை துடிக்கிறது.

முதுமையில் இதயதசை பலவீனமடைகிறது. ஏனெனில் அப்போது குறைந்த அளவு இரத்தமே இதயத்துக்கு வருகிறது.

புகைப் பிடித்தல், குடிப்பழக்கம் ஆகியவை இதயத்தை மேலும் பாதிக்கும்.
____________________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
மிஸ்டர் மொக்கையும் நண்பரும் தொடர்வண்டியில் சென்றுகொண்டிருந்தார்கள். எதிரில் அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் இவர்களைப் பார்த்து இந்தியில் கேட்டார்..

தேரா நாம் க்யா..?

இருவரும் விழிக்க, அடுத்து மலையாளத்தில் கேட்டார்..

நிங்கள்ட நாமம் ஏதானு..?

இதுவும் புரியாமல் போகவே, பயணி கன்னடத்தில் வினவினார்..

நிம்ம ஹெசுரு ஏனு..?

இதற்கும் அருள் வடிவாக மொக்கை & கோ விழிக்கவே மனம் தளராத பயணி கேட்டார்..

மீ பேரு ஏமி..?

இதற்கும் பதில் இல்லை.. பயணி சோர்ந்துபோய் வேறுபுறம் திரும்பிக்கொண்டார்.
மிஸ்டர் மொக்கை நண்பரிடம் சொல்லலானார்..

இதுக்குதான் நான் எப்போவும் சொல்லிட்டு இருக்கேன்.. நமக்கு தமிழ் மட்டும் போதாது.. இன்னொரு மொழி கட்டாயம் தெரிஞ்சிருக்கணும்ன்னு..!

நண்பர் சொன்னார்..

நான் அப்படி நெனைக்கல..எதிரே இருக்கற ஆள் கூட 4 மொழி பேசறார்.. என்ன புண்ணியம்..? வேலைக்காகாம வெறுத்துப் போயி உக்காந்திருக்கார் பாரு..!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: