Thursday, August 23, 2007

Very Good Morning.

உண்ணாது நோற்பார் பொரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
 
Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.
____________________________________________________

*முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.

*ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.
____________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
ஆபரேஷன் தியேட்டர்ல ஏதோ தப்பு நடந்து போச்சுன்னு எதை வெச்சு சொல்றே..?

பேஷண்ட் ஜாலியா நடந்து வெளியே வர்றார்... டாக்டரை வார்டுக்குத் தூக்கிட்டுப் போறாங்களே..!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: