Tuesday, August 28, 2007

Very Good Morning.

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
 
Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth."
_____________________________________________________

மின்மினிப் பூச்சி எவ்வாறு ஒளியை உண்டாக்குகிறது?

மின்மினிப் பூச்சியின் அடிவயிற்றில் ஒரு வகையான உயிரணுக்கள் உள்ளன.

இதில் "லூசிபெரின்' என்ற ரசாயனப் பொருள் உள்ளது.

இந்த உயிரணுக்கள் மூச்சுக் குழலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மின்மினிப் பூச்சி மூச்சுவிடும் போது பிராண வாயுவுடன் அடிவயிற்றிலுள்ள லூசிபெரின் சேர்ந்து ஒளியை உமிழ்கிறது.

இச்செயல் நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறுகிறது. இது ஒரு உயிர் வேதியியல் செயலாகும்.
_____________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
ஒரு மனைவி தன் தோற்றத்தை நிலைக்கண்ணாடியில் பார்த்தபின் கணவனிடம் அலுத்துக்கொண்டாள்..

டார்லிங்.. எனக்கு ரொம்ப வயசாகுது போல இருக்கு.. தலையில் லேசா நரைமுடி தெரியுது.. உடம்புல ஒரு தொய்வு தெரியுது.. தாடைக்கு கீழே சதை போட்டிருக்கு.. முகத்தில் கொஞ்சம் சுருக்கம் வேற தெரியுது.. ப்ளீஸ்.. என்கிட்டே நல்லபடியா இருக்கும் விஷயம் என்னன்னு சொல்லுங்களேன்..

கணவன் சொன்னான்...

உன் கண்பார்வை சரியா இருக்கு டியர்..!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: