Monday, August 20, 2007

Very Good Morning.

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
 
Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.
______________________________________________________

* பற்கள் மஞ்சளாக இருந்தால் புதினா இலையை காய வைத்து பொடி பண்ணி அதனுடன் உப்பு சேர்த்து பல் தேய்த்து வந்தால் பல் பளிச்சிடும்.

* உதடு கருப்பாக இருந்தால் ரோஜா இதழை அரைத்து உதட்டில் தடவி வந்தால் உதடு மென்மையாகவும் சிவப்பாகவும் மாறிவிடும்.

* ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து அரைத்து அதனுடன் பால் சிறிதளவு கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழிந்து முகம் கழுவினால் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

* கண்களை சுற்றியிருக்கும் கருவளையத்தை நீக்க பால் ஆடையில் ரோஜா இதழும் பாதாம்பருப்பும் சேர்த்து அரைத்து கண்களை சுற்றி தடவி வந்தால் கருவளையம் நீங்கும்.

* முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்க: வெங்காய சாறு எடுத்து முகத்தில் தடவி மூன்று நிமிடம் காயவிடவும். பிறகு கழுவிவிட்டு தேன் நான்கு சொட்டு முகத்தில் தடவினால் முகம் சுருக்கம் நீங்கி பொலிவு பெறும்.

* தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்து அரை கப் பாலில் கூந்தலை அலசினால் கூந்தல் பட்டு போல் மென்மையாக இருக்கும.

* காலில் பித்த வெடிப்பு இருப்பவர்கள் சுடுதண்ணீரில் கல் உப்பு போட்டு அதில் கால்களை அரை மணி நேரம் வைத்து இருக்கவும்.பிறகு துடைத்து விட்டு மருதாணி அரைத்து பூசி வந்தால் வெடிப்பு மறைந்துவிடும்.

* சிலருக்கு கை அல்லது கால் முட்டியில் கருப்பாக இருக்கும். இதற்கு ரோஸ்வாட்டர், எலுமிச்சபழம் சாறு, தயிர் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒன்றாக கலந்து கருப்பாக இருக்கும். இடத்தில் தேய்த்து வந்தால் கருப்பு மறைந்துவிடும்.

* கடலைமாவு சிறிதளவு பாலாடை சிறிதளவு இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி ஐந்து நிமிடம் கழித்து ஐஸ் தண்ணீரில் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
______________________________________________________

ஆகஸ்ட் 15 நம்ம சுதந்திர தினம் மட்டுமல்ல...

15 ஆகஸ்ட் 1915 பனாமா கால்வாய் திறக்கப்பட்ட தினம்

15 ஆகஸ்ட் 1769 நெப்போலியன் பிறந்த தினம்

15 ஆகஸ்ட் 1877 "hello" என் கிற வார்த்தையை தொலைபேசி அழைப்புக்கும் பதில் சொல்வதற்கும் தாமஸ் ஆல்வா எடிசன் அறிமுகப்படுத்திய தினம்

15 ஆகஸ்ட் 1948/1971 கொரியா/பக்ரைன் சுதந்திர தினம்

15 ஆகஸ்ட் 1947 இந்திநடிகை ராகி குல்ஸார் பிறந்த தினம்

15 ஆகஸ்ட் 1872 ஸ்வாமி அரவிந்தர் பிறந்த தினம்
______________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
"என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?"

"ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!"

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: