ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct. _____________________________________________________ நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன. நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும். உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள். பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது. அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே. மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், மற்றவர்களைக் சார்ந்தே வாழ்கிறான். எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கும்போது, ஒருவரும் நன்றாகச் சிந்திப்பதில்லை. சமுதாயத்தின் எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான் உள்ளது. உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல. அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான். அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது. இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும் என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும். நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை. இன்றைய நகைச்சுவை புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்? என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே! --Regards, Rajesh Prabhu. R "There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
Friday, August 24, 2007
Very Good Morning.
Posted by Rajesh Prabhu. R at 6:34 AM
Labels: Daily Digest, Jokes, Thirukkural
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment