Tuesday, October 2, 2007

Very Good Morning.

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தொ ரிந்து கூறப் படும்.

The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.
____________________________________________________

உலகில் எத்தனை வகையான மீனினங்கள் உள்ளன?

இது வரை சற்றேறக்குறைய 23,000 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. வரும் பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை 30,000த்தைத் தொட்டுவிடக் கூடும் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

உலகின் மிகப்பெரிய மற்றும் சிறிய மீனினம் எது?

மிகப் பெரிய மீனினம் திமிங்கலச் சுறா. இது 50 அடி நீளம் வரை வளரக் கூடியது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நன்னீர் மற்றும் உவர் சதுப்பு நிலங்களில் காணப்படும் கோபி என்ற 1 செ.மீ. நீளத்துக்கே வளரக்கூடிய மீனினமே மிகச் சிறியதாகும்.

மீன்கள் உணவை மென்று விழுங்குகின்றனவா?

மனிதனைப் போல் மீன்கள் உணவை மென்று விழுங்குவதில்லை. சுறா பேன்ற மீனினங்கள் உணவைப் பிடித்து அப்படியே விழுங்கி விடுகின்றன. திருக்கை போன்ற மீனினங்கள் சங்குகளைப் பற்களால் உடைத்து அப்படியே கபளீகரம் பண்ணி விடுகின்றன. சைவ மீன்கள் அதாவது தாவர உணவு உண்ணும் மீன்களில் தொண்டையில் காணப்படும் பேரன்ஜ் பற்களால் உணவை அரைத்து விழுங்குகின்றன. ஆக மொத்தம் இதற்கு மற்றுமொரு மிக முக்கியக் காரணம், இவைகள் உணவை மென்று கொண்டிருந்தால், பிராண வாயு தண்ணீரில் இருந்து எடுக்கும் செயல் நின்று போய்விடும்.

மீன்களால் பின்னோக்கி நீந்த முடியுமா?

பெரும்பாலானவர்கள் மீன்கள் முன்னோக்கி மட்டுமே நீந்த முடியும் என நம்புகின்றனர். ஆனால் உண்மையில் மீன்களால் பின் நோக்கியும் நீந்த முடியும். பெரும்பாலான விலாங்கு வகையறாக்கள் இந்த சாதனையைச் செய்ய முடியும். ஆனால் அவை இதனை அடிக்கடி செய்வதில்லை.
____________________________________________________

இன்றைய நகைச்சுவை
---------------------------------------
கணவன் : ''இன்னைக்கு நைட் என்ன டிபன்?''

மனைவி : ''விஷம்!''

கணவன் : ''ஓ.கே, எனக்காக வெயிட் பண்ணவேண்டாம். நீ சாப்பிட்டுட்டு தூங்கு!''

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: