Tuesday, October 16, 2007

Very Good Morning.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

If the good speak vain words their eminence and excellence will leave them.
_______________________________________________

பூசணி !!!

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்குப் போனால், பத்தில் ஒருவர்தான் பூசணிக்காய் பக்கம் திரும்புவார்கள். காரணம், விலை குறைவு. அதனால் வாங்குவோரும் குறைவு. ஆனால், அதில் உள்ள மருத்துவ சக்திகளைத் தெரிந்துகொண்டால், யாரும் பூசணிக்காய் வாங்காமல் திரும்பமாட்டார்கள். அதனால், பூசிணக்காயின் மருத்துவ குணங்களைக் கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்.

பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.
_______________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
"மகாராணி, ரோஜாவுக்குத் தேரைக் கொடுத்துட்டார் அரசர்!"

"தரட்டுமே... ஏற்கனவே முல்லைக்குத் தந்தவர்தானே!"

"ஐயையோ! இந்த ரோஜா அரசருடைய சின்னவீடு!"

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: