Tuesday, October 23, 2007

Very Good Morning.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

Speak what is useful, and speak not useless words.
_____________________________________________________________

பெருந்தலைவர் காமராஜர் !!!!

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.

1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.

கண்ணனைப் பாரதி "கண்ணம்மா" ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டது போல் ஆணாகப் பிறந்த காமராஜரை "காமாட்சி" ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.

தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை "ராஜா" என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, 'காமராஜ்' என்று ஆனது.
_____________________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
"உங்க படத்தைப் பார்த்து, ஒரு பழக்கத்தையே விட்டுட்டேன், சார்!"

"வெரிகுட்! என்ன பழக்கம்?"

"படம் பார்க்கற பழக்கம்தான்."

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: