அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.
The world through charity supports the weight of those who reproach others observing their absence. ____________________________________________________
1. "வடக்கே சூலம்" என்பார்கள். அதாவது வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கக்கூடாது என்று. இது பலருக்கு மூடநம்பிக்கையாக தெரியும். ஆனால் உன்மை என்ன என்றால், வடக்கு பக்கம் (North Pole) காந்த சக்தி அதிகம். அதனால் வடக்கு பக்கம் தலை வைத்து படுத்தால் அது நம்முடைய மூளையை பாதிக்கும். அதனால் தான் இந்த சொற்றொடர் உருவானது.
2. வீட்டுக்குள் ஒரு மணப்பென் வரும் பொழுது வலது காலை வைத்து வரவேண்டும் என்பார்கள். அதற்கு காரணம் "இந்த உலகம் இடமிருந்து வலமாக சுற்றுகிறது. அதே போல நானும் இந்த உலகோடு (அதாவது புகுந்த வீட்டோ டு) ஒத்துப் போவேன்" என சொல்வதாக அர்த்தம்.
3. பசுவின் எருவை எரித்தால் வரும் சாம்பலை (திருநீரு) நெற்றியில் பூசிக்கொள்வது, இரு வழிகளில் விளிம்புகிறது. அதில் இருக்கும் மருத்துவகுணம் தலைவலிக்கு இதமாக இருக்கும். மற்றும் அது பார்ப்பவர்க்கு "என் மனம் இந்த திருநீரைப் போல வென்மையாக, சுத்தமாக இருக்கிறது" என சொல்வது. அதே போல குங்குமம் இடுவது, "என் இரத்தம் சுத்தமாக இருக்கிறது" என்று பார்ப்பவர்க்கு சொல்வதாக அர்த்தம். (கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம்")
4. நம் மதத்தில் பல்வேறு திருவிழாக்கள் நடக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கம் கொண்டது. ஆயுத பூஜை என்பது நாம் நம்முடைய தொழில் பக்தியை காட்டுவதாக இருந்தாலும், அது மறைமுகமாக நம் இருப்பிடத்தை, வீடோ தொழில் செய்யும் இடமோ, வருடத்திற்கு ஒரு முரை சுத்தம் செய்ய சொல்கிறது (எனக்கு மிகவும் உதவும்). பொங்கல், நன்றியின் அடையாளத்தை நாம் மனதில் விதைக்கிறது. மற்றும் இந்த திருவிழாக்கள் அனைத்தும் நம்முடய பணத்தில் கனிசமான அளவை செலவு செய்ய வைக்கிறது. இதன் மூலம் அதை நம்பி வாழும் மக்களுக்கு மறைமுகமாக உதவுகிறது.
5. அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்பது அருந்ததி என்பது கற்ப்புள்ள நட்சத்திரம். அதனால் தான் திருமணம் முடிந்ததும் அந்த நட்சத்திரத்தை பார்க்க சொல்லுவது.
6. கணவனை இழந்தவர்கள் வெள்ளை புடவை கட்டுவது என்பது, "நான் என் கனவர் இறந்த பின்பும் தூயவளாக இருக்கிறேன்" என கூறுவதாகும்.
7. வீட்டிற்கு மாட்டு சானம் போட்டு மொழுகுவதை பார்த்திருப்போம். சானத்தில் உள்ள சில நச்சுத்தன்மை தரையில் உள்ள சிறிய கிருமிகளை அழிக்கும் சக்தி கொன்டதால் அப்படி செய்கிறோம்.
8. பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பதை கேட்டிருப்போம். மஞ்சள் ஒரு கிருமி நாசினி. மஞ்சளை உபயோகித்தால் முகத்திற்கு நல்லது. துரதிர்ஷ்டவசமாக மஞ்சளை அமெரிக்க நிருவனம் ஒன்று சொந்தம் கொண்டாடிற்று (Patent). அதனால் இனி நாம் உபயோகிக்கும் ஒரு துளி மஞ்சளுக்கும் நாம் அமெரிக்காவிற்கு பணம் செலுத்த வேண்டும்.
9. காலையில் நாம் சூரிய நமஸ்காரம் செய்வோம். அதற்கு காரணம் இது தான். நம் தொப்புளுக்கு மணிப்பூரம் என்று பெயர். இது சூரிய பகவானுடன் சம்பந்தப்பட்டது. அதனால் இது "சூரியனின் சக்கரம்" என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் முதல் கிரணம் இதன் மீது பட்டால், உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் யோகா பயில்கிறவர்கள் அதிகாலையில் முதல் வேலையாக சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். மணிப்பூரச் சக்கரம் மனிதனின் நரம்பு மண்டலத்தில் நல்ல தாக்கங்களை ஏற்படுத்தவல்லது. கண், நரம்புகள், வயிறு, ஆறாவது அறிவு எனப்படும் அதீதமான உணர்வு ஆகியவற்றின் மீது இதனால் நல்ல விளைவுகளை ஏற்படுத்த முடியும். இதை மனிதனின் இரண்டாவது மூளை என்று கூட சொல்லலாம். இது சிறுய பாதாம் பருப்பு அளவுதான் இருக்கிறது. இது இன்னும் சுருங்கும் போது பயம், சோகம், மனச்சோர்வு போன்ற உணர்ச்சிகள் ஏற்படும். தினமும் யோகா, தியானம், சுதர்சனக்கிரியா போன்றவை செய்து வந்தால், இந்த சக்கரத்தின் அளவு பெரியதாக ஆகும். உடல் உருப்புகளின் வேலைகள் மேம்படும்.
10. இன்றும் நாம் பயன்படுத்தும் உரங்கள் யாவும் மேலை நாடுகளில் தடை செய்யப்பட்டவை. இன்னும் சில ஊர்களில் இயற்கை உரங்களை பயன்படுத்துபவரும் இருக்கிறார்கள். மண்புழுக்களை வளர்த்து அதை உரமாகப் பயன்படுத்துகிறார்கள். இது மண்ணுக்கு எந்த தீங்கும் விளைவிக்காதது. ____________________________________________________
இன்றைய நகைச்சுவை ---------------------------------------- ''உங்க மாமியாருக்கு இதயம் பலவீனமா இருக்கும்மா....எந்த அதிர்ச்சியான நியூஸையும் சொல்லக் கூடாது!''
''அப்ப எழுதிக் காண்பிக்கலாமா டாக்டர்...?''
-- Regards, Rajesh Prabhu. R
"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
0 comments:
Post a Comment