Monday, October 22, 2007

Very Good Morning.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.
___________________________________________________

இந்திராவின் ஆட்சிக்காலம் அது...

மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நேரம். ""பிரதமர் இந்திரா காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்திக்கலாம்'' என்று இஸ்ரோ தலைவர் தவான், அப்துல்கலாமை அழைத்தார்.

கலாம் செல்வதற்குத் தயங்கினார். தவான் காரணம் கேட்டதற்கு கலாம் சொன்னார்: ""நான் எப்போதும்போல் சாதாரண நீலவண்ணச் சட்டையே அணிந்திருக்கிறேன். கால்களுக்குப் பூட்சுகள் இல்லை. செருப்புகள்தான் அணிந்துள்ளேன். இந்தக் கோலத்தில் பிரதமரைச் சந்திக்கத் தயக்கமாக இருக்கிறது'' என்றார்.

அதற்கு தவான், ""உடையைப் பற்றி கவலைப்படாதீர்கள். வெற்றி என்கிற பேரழகான ஆடையை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்'' என்று கூறி பிரதமரிடம் அழைத்துச் சென்றார்.
___________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
"வாடகைக்கு வீடு பார்க்கறீங்களாமே, எப்படிப்பட்ட வீடா பார்க்கறீங்க?"

"உள்ளே கொலையே நடந்தாலும் அக்கம் பக்கம் யாருக்கும் தெரியக்கூடாது! கிடைக்குமா?"

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: