Thursday, October 18, 2007

Very Good Morning.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.
_______________________________________________________

டெஸ்க்டாப்பில் உள்ள கோப்பினை மறைக்க..

1. நீங்கள் எந்த இடத்தில் மறைக்கட்டு (இன்விசிபிள் போல்டர்) தயார் செய்ய வேண்டுமோ அங்கே (டெஸ்க்டாப்பில் அல்லது மை டாகுமெண்டில்) ஒரு புதிய போல்டரை உருவாக்குங்கள்.

2. அதனை வலது சொடுக்கி ரீநேம் என்ற பொத்தானை தட்டுங்கள். பின் அங்கே இருக்கும் பெயரினை (Newfolder) அழியுங்கள்.

3. நம்பர் லாக் ஆகியிருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும். ALT - கீயை அழுத்தியபடி 0160 என்று பெயரிடுங்கள். பெயரிட்டபின் ALT கீயை விடுவித்து பிறகு எண்டர் பொத்தானை தட்டுங்கள்.

4.இப்போது அந்த கோப்பு பெயரில்லாமல் தோன்றும். அதனை வலது சொடுக்கி Properties தட்டுங்கள்.

5. Customize tab செல்லுங்கள்.

6. Change Icon என்பதைக் கண்டு பிடித்து அதனை சொடுக்குங்கள். அதில் கீழ் வந்து இமேஜ் (படம்) இல்லாமல் வெற்றாக இருப்பதை தேர்ந்து எடுங்கள்.

7. OK பொத்தானை தட்டுங்கள். இப்போது உங்களுக்கு மறைக்கட்டு (இன்விசிபிள் போல்டர்) தயார்.

Important Note: This method will not prevent your files from showing up in Search results.
_______________________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------------------
"இப்ப நான் சொல்லப் போறது ரொம்ப பரம ரகசியம்...
யார்கிட்டேயும் மறந்து போய்ச் சொல்லிடாதே...
முக்கியமா குமார்கிட்ட சொல்லிடாதே..."

"ஏன்?"

"அவன்கிட்ட ஏற்கெனவே சொல்லிட்டேன்...!"

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: