துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்கு.
What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ? _______________________________________________________
அடர்த்தியான கூந்தலை விரும்புகிறவர்கள் உணவில் அதிக அக்கறைக் காட்ட வேண்டும். கேரட், பழவகைகள், பால் மற்றும் பால் வகை உற்பத்தி பொருட்கள், முட்டை, மீன், காட்லிவர் ஆயில் போன்ற வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். அவை ஆரோக்கியத்திற்கும், அடர்த்தியான கூந்தலுக்கும் ஏற்றது. வைட்டமின் ஈ நிறைந்திருக்கும் இனிப்பு கிழங்குகள், தர்பூசணி, முட்டைக் கோஸ், தக்காளி, செர்ரீ, கீரை வகைகளையும் சாப்பிட்டு வரவேண்டும்.
தலைக்கு குளித்த உடனே கூந்தலை கட்டிவிடக் கூடாது. தலைகாயும் முன்பே கூந்தலை அழுத்தி சீவவும் கூடாது. குளித்த பின்பு தலையை இயற்கையாக காயவிடவேண்டும். டிரையர் பயன்படுத்தி உலர வைப்பதாக இருந்தால், கூந்தலில் 10 செ.மீ. தள்ளியே டிரையரை பிடிக்கவேண்டும்.
முடி உதிரும் தொல்லையுள்ளவர்கள், ஆமணக்கு எண்ணையை தலையில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்பு நன்றாக சூடாக்கப்பட்ட டவலால் தலையை துவட்டிக்கொண்டே இருக்கவேண்டும். அடுத்து அந்த டவலால் தலையைச்சுற்றி கட்டிவிடவேண்டும். பின்பு ஷாம்பு பயன்படுத்தி தலையைக் கழுவவேண்டும். இதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் செய்வது நல்லது. _______________________________________________________
இன்றைய நகைச்சுவை ---------------------------------------- நீங்க வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிச்சாதான், எங்க அப்பா உங்களுக்கு என்னை கட்டிவைப்பாராம்...''
''அவர் கை நிறைய சம்பாதிச்சா என் பின்னாடி ஏன் சுத்தப் போறாருன்னு நீ திருப்பிக் கேட்கவேண்டியதுதானே?''
-- Regards, Rajesh Prabhu. R
"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane "A busy man has time for everything and a lazy man has time for nothing." |
0 comments:
Post a Comment