Wednesday, July 11, 2007

Very Good Morning.

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
 
Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.
____________________________________________

* சாம்பல் நிறம் கொண்ட திமிங்கலத்தின் இதயம் நிமிடத்துக்கு 9 தடவைதான் துடிக்கிறதாம். ஆனால் வான்வெளியில் ஹம்மிங் பறவை வேகமாக பறக்கும் போது அதன் இதயம் நிமிடத்துக்கு 1200 தடவை துடிக்கிறது.

* குதிரைகளுக்கு ஐந்து வயதுக்குள் அனைத்து பற்களும் முளைத்து விடுகின்றன. ஆனால் ஆண் குதிரைக்கும், பெண் குதிரைக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. ஆண் குதிரைக்கு 40 பற்களும், பெண் குதிரைக்கு 36 பற்களும் முளைக்கின்றன.

* ஆப்பிரிக்காவில் `ஹார்ன்பல்' என்ற பறவை மரப் பொந்துகளில் வாழுகிறது. இது முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கும் காலங்களில் மரப் பொந்துகளில் புகுந்து கொண்ட பின் களிமண்ணால் தனக்குத்தானே சிறை அமைத்துக் கொள்ளுமாம்.
_____________________________________________

இன்றைய நகைச்சுவை
----------------------------
"பக்கத்து தெரு பொண்ணுக்கு 'லவ் லெட்டர்' கொடுத்த ஆளை உங்க அம்மா செமத்தியா அடிச்சாங்கண்ணு சொல்றியே... உங்க அம்மாவுக்கு என்ன அவ்வளவு அக்கறை?"

"லவ் லெட்டர் கொடுத்தவர் எங்க அப்பாதானே..."

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: