Tuesday, July 17, 2007

Very Good Morning.

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
 
Those who study propriety of conduct will not speak evil, even forgetfully.
________________________________________________________

நம் வாழ்க்கையை வசந்தமாக மாற்றச் செய்ய எளிய இனிய தாரகமந்திரம்...


1. என்னால் புது விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.

2. தெரியாத விவரங்களை என்னால் கேட்டுத் தெரிந்து கொள்ளமுடியும்.

3. தெரியாததைத் தெரியாது என்று சொல்ல என்னால் முடியும்.

4. என்னால் தற்சமயம் இயலாத காரியங்களை என்னால் இயலாது என்று சொல்லவும் என்னால் முடியும்.

5. தோல்விகளை தாங்கிக்கொள்ள என்னால் முடியும்.

6. மீண்டும் முயலவும் என்னால் முடியும்.

7. விதைத்தபின் பயிர் விளையும் வரை காத்திருக்க என்னால் முடியும்.

8. பிறரது பாராட்டுகள் கிடைக்காத போதும் என் கொள்கையில் நான் உறுதியாய் இருக்க முடியும்.

9. களைப்பில்லாமல் என் கடமைகளை உற்சாகமாக செய்ய முடியும்.

10. அவசியமான சமயத்தில் பிறர் உதவியை நாட என்னால் முடியும்.

11. பிறர் உதவிக்கு நன்றி சொல்ல என்னால் முடியும்.

12. என் தவறுகளை யாரும் சுட்டிக்காட்டும் பொழுது என்னால் நிதானமாக இருக்க முடியும்.

13. நான் தவறாக ஒன்றை சொல்லிவிட்டால் அதற்கு மன்னிப்பு கேட்க என்னால் முடியும்.

14. பிறர் கோபப்படும்பொழுது என்னால் பொறுமையாக இருக்க முடியும்.

15. சின்ன விஷயங்களை பெரிது படுத்தாமல் இருக்க என்னால் முடியும்.

16. பேசாமலிருப்பதே சிறந்தது என்னும் சமயம் என்னால் பேசாமலிருக்க முடியும்.

17. என்னாலும் பிறர்க்கு உதவ முடியும்.

18. எந்நிலையிலும் தன்னம்பிக்கயோடு செயல்பட என்னால் முடியும்.
________________________________________________________

இன்றைய நகைச்சுவை
________________

தேர்தலில் ஜெயிச்சி பாராளுமன்றத்துக்குப் போன நம்ம கபாலியை ஏன் கைது பண்ணிட்டாங்களாம்?

பாராளுமன்றத்துக்கு வாசல் வழியா போகாம, ஜன்னலை உடைச்சிக்கிட்டுப் போயிருக்கான்..

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: