Thursday, July 19, 2007

Very Good Morning.

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
 
The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.
 
-------------------------------------------------------------------------------------
விளையாட்டா நெனைச்சுடாதீங்கப்பு..!

* 1912-ம் ஆண்டு வரை உயரம் தாண்டும் போட்டியில் ஓடிவந்து தாண்ட அனுமதி கிடையாது. நின்ற இடத்திலிருந்துதான் தாண்ட வேண்டும்.

* 1920-ம் ஆண்டு ஆன்டர்வார்ப் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலிருந்துதான் வீரர், வீராங்கனைகள் உறுதிமொழி எடுக்கும் பழக்கம் தொடங்கியது.

* 1928-ம் ஆண்டு முதல் பெண் வீராங்கனைகள் தடகள போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

* விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் ஆட்டம் 1913-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

* உலக செஸ் போட்டியின் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் ஆசிய வீரர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் கடந்த 1991-ம் ஆண்டில் ஜனவரி 30-ம் தேதியன்று நடந்த போட்டியில் அலெக்ஸி டிரிவ் என்னும் வீரரை வென்று இந்த தகுதியைப் பெற்றார்.

* சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது 1961-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

* சிறந்த விளையாட்டு பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியா விருது 1985-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

* 1990 ம் ஆண்டு பிஜீங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில்தான் முதன்முதலாக கபடி சேர்த்துக்கொள்ளப்பட்டது. இந்தியாவே அதில் வென்றது.
-------------------------------------------------------------------------------------

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
எதுக்குய்யா, என் மேஜையில் இருந்த டேபிள் வெயிட்டைக் கீழே தள்ளிவிட்டே?

உங்ககிட்டே கையெழுத்து வாங்கி என் ஃபைல் நகரனும்னா, எதையாவது வெயிட்டா தள்ளணும்னு வெளியே சொன்னாங்களே சார் !

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: