Tuesday, July 31, 2007

Very Good Morning.

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்.
 
Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?" Those who touch not the shoulder of her who belongs to another.
_______________________________________________________

ஆபல் பரிசு..  ஆமாங்க.. ஆபல்தான்.. நோபல் பரிசு போல...

"கணிதத்துக்கான நோபல் பரிசு' என்று மதிப்புடன் குறிப்பிடப்படும் ஆபல் பரிசு, கணிதத்தில் தனிப்பெரும் சாதனை புரியும் மேதைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும். நோபல் பரிசு போலவே மிக உயர்ந்த பரிசுத் தொகை (ரூ.4.5 கோடி) கொண்டது.

நார்வே நாட்டு கணித மேதை நீல்ஸ் ஹென்ரிக் ஆபலின் நினைவாக, ஆண்டுதோறும் ஆபல் பரிசு வழங்கப்படும் என 2001-ல் நார்வே அரசு அறிவித்தது. 2003-ம் ஆண்டு முதன் முதலில் ஆபல் பரிசு வழங்கப்பட்டது.

நீல்ஸ் ஹென்ரிக் ஆபல் (1802-1829), நமது நாட்டு மேதை ராமானுஜத்தைப் போலவே, மிக இளம் வயதிலேயே கணிதத்தில்  பல சாதனைகள் புரிந்தவர். ராமானுஜத்தைப் போலவே மிக இளம் வயதிலேயே காச நோயால் தாக்கப்பட்டு உயிரைப் பறிகொடுத்தவர். அபிலியன் சார்பு, அபிலியன் குலம், அபிலியன் தேற்றம் போன்றவை கணிதத்துக்கு ஆபலின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்.

கணிதத்துக்கு நோபல் பரிசு வழங்கப்போவதில்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னரே "ஆபல் பரிசு' உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இரண்டாம் ஆஸ்கர் என்ற மன்னர் அதற்கான நிதியுதவி செய்ய முன்வந்தார். ஆனால் நார்வே மற்றும் சுவீடன் நாடுகளுக்கு இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து 1905-ல் ஆபல் பரிசுத் திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் நீல்ஸ் ஹென்ரிக் ஆபலின் இருநூறாவது ஆண்டை முன்னிட்டு, நார்வே "ஆபல் பரிசை' அறிவித்தது. உலகளவில் அங்கீகாரம் பெற்ற 5 கணித மேதைகள் கொண்ட குழு, நார்வே அறிவியல் கழகத்தின் சார்பில் பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. 2007-ம் ஆண்டுக்கான ஆபல் பரிசைப் பெற்றவர் சென்னையில் பிறந்த, அமெரிக்க வாழ் கணிதப் பேராசிரியர் ஸ்ரீநிவாசா எஸ் வரதன்."ஃபீல்ட்ஸ் மெடல்' எனும் பரிசும் கூட, கணிதத்துக்கான நோபல் பரிசு எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 40 வயதுக்கும் குறைவானவர்களுக்கே வழங்கப்படுவதாகும். இதேபோல், சுவீடன் அரச கழகம் 1982 முதல் வழங்கி வரும் "கிராஃபூர்டு பரிசு', 2004 முதல் வழங்கப்பட்டு வரும் "ஷா பரிசு' போன்றவையும் கணிதத்துக்கான நோபல் பரிசு என்றே வர்ணிக்கப்படுகின்றன.
_______________________________________________________

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!TAKE IT EASY :)

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: