Wednesday, July 25, 2007

Very Good Morning.

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
 
He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.
 
WWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWW

* சமவெளியை விட மலைப் பகுதிகளில் டென்னிஸ் பந்து உயரமாக மேலெழும்புகிறது. சமவெளி பகுதியை விட மலைப் பகுதிகளில் புவியீர்ப்பு விசை குறைவாக இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.

* அமெரிக்க விண்வெளி வீரர் மைக்கேல் காலின்ஸ் வான்வெளியில் உள்ள அதிசயங்களை `ஹாசல் பிளாட்' என்னும் கேமிராவின் உதவியால் படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கேமிராவை தவறவிட்டுவிட்டார். அன்றிலிருந்து அது வான வெளியில் பூமியின் பாதையில் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

* விஞ்ஞான கருவிகளுக்கு எட்டிய விண்மீன்களில் மிகத் தொலைவில் உள்ள விண்மீன்களிலிருந்து பூமிக்கு ஒளிக்கதிர் வந்து சேர சுமார் ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகுமாம். சூரியனிடமிருந்து புறப்படும் கதிரின் ஒளி சுமார் எட்டே நிமிடங்களில் பூமியை அடைந்து விடுகிறது.

* தெளிவான வானத்தில் ஒருவர் ஒரு மணி நேரத்தில் பத்து எரிகற்களுக்குக் குறையாமல் காணலாம். பூமியின் மீது ஒரு நாள் முழுவதும் 7,00,00,000 எரிகற்கள் விழுகின்றன. அதனால், பூமியின் எடை சுமார் ஐந்து டன் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.

WWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWW

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
இந்த ஏரியாவுல ஜொள்ளுப் பேர் வழிகள் அதிகமா?

எப்படி கண்டுபிடிச்சீங்க?

அடிக்கடி ஈவ் டீசிங் நடை பெறும் இடம் பெண்கள் மாற்றுப் பாதையில் செல்லவும் என்று போர்டு வச்சுருக்குதே.

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: