Friday, July 20, 2007

Very Good Morning.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றரின் பேதையார் இல்.
 
Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door.
 
-----------------------------------------------------------------------------
* சாஞ்சி ஸ்தூபிகள் எங்கு அமைந்துள்ளது? - மத்திய பிரதேசம்

* தென்னிந்தியாவின் பனாரஸ் என எந்த நகரை அழைக்கிறார்கள்? - ராமேஸ்வரம்

* திருக்குட மூக்கு என்பது தமிழ் நாட்டின் எந்த பிரபல ஊரின் பெயர்? - கும்பகோணம்

* இந்தியாவின் நைல் நதி என்று எதனை அழைக்கிறார்கள்? - சிந்து நதி

* மேற்கு வங்க மாநிலத்தின் பிரபல துறைமுகங்கள்? - கொல்கத்தா, ஹால்டியா

* நமது நாட்டின் மிகப்பெரிய இரட்டை நகரங்கள்?- ஹைதராபாத் - செகந்திராபாத்

* இந்தியாவின் முதல் அருங்காட்சியகம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டது? - கொல்கத்தா (1857-ம் ஆண்டு)

* இந்தியாவின் முதல் பஞ்சு மில் எங்கு ஆரம்பிக்கப்பட்டது? - மும்பை (1854-ம் ஆண்டு)

* கொல்கத்தா நகரம் எத்தனை பெரிய கிராமங்களின் இணைப்பாகும்? அவற்றின் பெயர்? - மூன்று (சுசாந்தி, கோவிந்தப்பூர், கொல்கத்தா)

* நமது நாட்டில் முதன் முதலாக எங்கு, எப்போது ஆப்பிள் பயிரிடப்பட்டது? - சிம்லா, 1887-ம் ஆண்டு

* வால்மீகி ராமாயண காவியத்தை எந்த இடத்தில் எழுதியதாக கூறப்படுகிறது? - பித்தூர் (உ.பி.)

* நமது நாட்டின் முதல் கடற்படை பயிற்சி தளம் எங்கு துவக்கப்பட்டது? - கொச்சி (1969-ம் ஆண்டு)

* இந்தியாவிலிருந்து வெளியான முதல் நாளிதழ்? - மும்பை சமாச்சார் (கி.பி. 1822)

* இங்கிலாந்தை எதிர்ப்பதற்கு ஜெர்மனியின் துணையோடு இந்திய சேவைப்படை என்னும் அமைப்பை உருவாக்கியவர்? - செண்பகராமன் பிள்ளை
-----------------------------------------------------------------------------

இன்றைய நகைச்சுவை
--------------------------------------
அரசியல்ல இதெல்லாம் சாதார்ணம்ப்பா..!

எங்கள் தலைவர் சரியாகக் கணக்குப் பார்க்காமல் எல்லா ஸீட்டுகளையும் தோழமைக் கட்சிகளுக்கே கொடுத்துவிட்டதால், கடைசியில் எங்களுக்கு ஸீட் இல்லாமல் போய்விட்டது. எனவே, தோழமைக் கட்சிகள் தலா இரண்டு ஸீட்டுகளைத் திரும்ப எங்களிடம் ஒப்படைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: