Monday, July 23, 2007

Very Good Morning.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார்.
 
Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.
______________________________________________________________

* உருளைக்கிழங்கு, பாதாம்பருப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து கண்களுக்கு கீழே பூசிவர கருவளையம் காணாமல் போகும்.

* கோதுமை மாவு சிறிதளவு எடுத்து அதில் பாலும் தேங்காய் எண்ணெயும் சேர்த்து குழைத்து கால்களில் பூசி அரைமணி நேரம் கழித்து குளித்தால் ஒரு வாரத்தில் கால்களில் உள்ள மாசு மரு நீங்கி கால்கள் பளபளப்பாகி விடும்!

* பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைய வெள்ளைப் பூண்டின் சாறை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து ஈரத்துணியால் துடைத்து எடுங்கள். வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் நாளடைவில் தழும்புகள் மறைந்து விடும்.

* ஆபரணங்கள் அணிவதால் சில பெண்களுக்கு கழுத்துப் பகுதியில் கறுப்பாக காணப்படும். இதைப் போக்குவதற்கு பயித்தம் மாவு, கஸ்தூரிமஞ்சள் இவற்றைக் கலந்து தடவி வந்தால் கறுப்பு நிறம் நீங்கிவிடும்.

*  வெயில் காலம் வந்தாலே கூடவே வேர்க்குருக்களும், வேணல் கட்டிகளும் வந்துவிடும். நுங்கைப் பிளந்து அதன் சதைப் பற்றான பகுதியை வேர்க்குரு உள்ள பகுதியில் நன்கு தேய்த்து 30 நிமிடங்கள் ஊற விடவும். வேர்க்குருக்கள் நான்கைந்து நாட்களில் மறைந்துவிடும்.

* லிப்ஸ்டிக் கறையைப் போக்க யூகலிப்டஸ் ஆயில் பயன்படுத்தலாம்.

* பத்துப் பதினைந்து செம்பருத்தி இலைகளை அம்மியில் வைத்து விழுதாக அரைத்து ஒரு மேசைக் கரண்டி சீயக்காய்த் தூளைக் கலந்து நீராடினால் தலைமுடி 'பளபள'.

* இளைஞர்களின் இளநரை மறைய, வாரம் இருமுறை மலைவேம்பு இலைகளை அரைத்து தலைக்குத் தடவி, பத்து நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் நாள்பட முடி கருமை அடையும்.

* வெண்டைக்காய்ப் பிஞ்சை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகு நீங்கும்.
______________________________________________________________

இன்றைய நகைச்சுவை
_______________________

புற்றுக்கு வெளியே நாகராஜன்னு நேம் போர்டு இருக்கே. ஏன்?

எந்தப் புற்றுல எந்தப் பாம்பு இருக்குமோன்னு யார்க்கும் சந்தேகம் வந்துடக்கூடாது பாருங்க அதற்குத்தான்..

--
Regards,
Rajesh Prabhu. R

"There is no future in any job. The future lies in the man who holds the job." - George Crane
"A busy man has time for everything and a lazy man has time for nothing."

0 comments: